Back to Top

கடனில்லா உதவித் திட்டம்

கடனில்லா உதவித் திட்டம்

June 13, 2018  

Bookmark and Share
ஐரோப்பா, ஆசியா, பசுபிக் மற்றும் லத்தீன் அமெரிக்காவுக்கான அமெரிக்க அரசாங்கத்தின் ஆயிரமாண்டு சவால் கூட்டுத்தாபனத்தின் (Millennium Challenge Corporation - MCC) முகாமைத்துவ பணிப்பாளரான கரோலின் குயேன் பாரியளவிலான 5 ஆண்டு கடனில்லா உதவித் திட்டமான உத்தேச MCC உடன்படிக்கையின் உருவாக்கத்தை மேம்படுத்துவதற்காக ஜூன் மாதம் 11 ஆம் திகதியில் இருந்து 13 ஆம் திகதி வரை இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.

வறுமையை குறைத்தல் மற்றும் இலங்கையர்களுக்கு பொருளாதார வாய்ப்புகளை ஊக்குவித்தல் என்ற குறிப்பான நோக்கங்களுக்காக இந்த உடன்படிக்கையை அமெரிக்க அரசாங்கம் இலங்கை அரசாங்கத்தின் பங்காண்மையுடன் உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

MCC என்பது அமெரிக்க அரசாங்கத்தின் இருதரப்பு உதவி முகவரமைப்பொன்றாகும். இது 2004 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதுடன், 30 இற்கும் மேற்பட்ட நாடுகளுடன் உடன்படிக்கைகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது, உடன்படிக்கை உருவாக்கத்தை இறுதி செய்வதற்கு 413 மில்லியன் ரூபாவை (2.6 மில்லியன் அமெரிக்க டொலர்) மேலதிகமாக வழங்குவதற்கான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடுவதற்காக முகாமைத்துவ பணிப்பாளர் குயேன் இலங்கைக்கான அமெரிக்க பிரதித் தூதுவர் ரொபர்ட் ஹில்டனுடன் நிதி அமைச்சில் இணைந்து கொண்டார்.

உயர் தரமுடையதும் ஆதர அடிப்படையிலானதும் நிலையானதுமான திட்டமொன்றை உருவாக்குவதற்கு தேவையான சாத்தியப்பாட்டு ஆய்வுகளுக்கு உதவியாக கடந்த ஜூலை மாதம் MCC வழங்கிய 1.2 பில்லியன் ரூபாவுக்கான (7.4 மில்லியன் அமெரிக்க டொலர் கடனில்லா உதவி) குறைநிரப்பியாக இந்த தொகை அமைந்துள்ளதுடன், உடன்படிக்கையின் மீது MCC வழங்கவுள்ள இறுதித் உதவித் தொகைக்கு மேலதிகமான ஒன்றாகவும் காணப்படுகிறது.

நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரட்ன மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கபீர் ஹாசிம் உள்ளிட்ட சிரேஷ்ட அரசாங்க அதிகாரிகளுடனும் முகாமைத்துவ பணிப்பாளர் குயேன் இந்த விஜயத்தின் போது சந்திப்புகளை நடத்தினார்.