Back to Top

போராட்டத்திற்கு மத்தியில் கல்வி நடவடிக்கை

போராட்டத்திற்கு மத்தியில் கல்வி நடவடிக்கை

July 4, 2018  

Bookmark and Share
கல்வி துறையை முடக்குவதற்கு இன்று (04) ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையில் மலையக பிரதேசத்தில் சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

அரசியல் பழிவாங்கல் என்ற ரீதியில் தகுதியற்ற 1200 பேருக்கு கல்வி துறையில் பதவி உயர்வுகள் வழங்குவதற்கு அரசாங்கம் முன்வந்துள்ளமைக்கு எதிராக நாடாளவீய ரீதியில் இன்று (04) பாடசாலைகளின் கல்வி செயற்பாடுகளை ஒரு நாள் முடக்குவதற்கான நடவடிக்கைகளை இலங்கை ஆசிரியர் சங்கம் மேற்கொண்டிருந்தது.

இந்த நிலையில் கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் இன்றைய தினத்தில் பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை முடக்கிவிடக்கூடாது எனவும், வழமை போல் கல்வி நடவடிக்கைகள் இடம்பெறும் எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கமைவாக ஏனைய பிரதேசங்களில் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பணிபகிஷ்கரிப்புகள் இடம்பெற்று வந்தாலும், நுவரெலியா மாவட்டத்தில் சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகை குறைந்து காணப்பட்டது. ஏனைய சில பாடசாலைகள் வழமை போல் இயங்குவதை காணக்கூடியதாக இருந்தது.

அத்துடன், மலையக பெறுந்தோட்டபகுதிகளில் உள்ள பாடசாலைகள் வழமைபோல் இயங்குவதாகவும் மலையகத்தில் உள்ள அதிபர்கள் ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் இந்த வேலை நிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லையென இலங்கை கல்வி சமூக சம்மேளத்தின் பொதுச்செயலாளர் சங்கர் மணிவன்னண் தெரிவித்தார்

குறித்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எமக்கு அழைப்புவிடுக்கவில்லையெனவும் அதனால் இலங்கை கல்வி சமுக சம்மேளனம் வேலை நிறுத்த போரட்டத்தில் கலந்து கொள்ளவில்லையெனவும் இலங்கை கல்வி சமூக சம்மேளத்தின் பொதுச்செயலாளர் சங்கர் மணிவன்னண் மேலும் தெரிவித்தார்

இதேவேளை வவுனிய கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் பாடசாலைக்கு மாணவர்கள் வருகை தந்துள்ள போதும் ஆசிரியர்களின் வருகை குறைவாக இருப்பதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

(அத தெரண நிருபர் கிரிஷாந்தன், சதீஸ்குமார்)

Most Viewed