Back to Top

கரும்புலி நாள்

கரும்புலி நாள்

July 5, 2018  

Bookmark and Share
தமிழீழ விடுதலைப் புலிகளின் கரும்புலி நாள் ஜுலை 5 திகதியான இன்று (05) முதற் கரும்புலி மில்லரின் நினைவு இடத்தில் கரும்புலி நாள் அனுஷ்டிக்கப்பட்டது.

மில்லர் தாக்குதல் செய்து வீர மரணமடைந்த நெல்லியடி மண்ணில் இன்று மதியம் நினைவுகூரல் இடம்பெற்றிருந்தது.

புனர்வாழ்வளிக்கப்பட்ட தமிழ் விடுதலைப் புலிகள் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வின் போது மாவீர்ர் ஒருவரின் உறவினர் தீபச் சுடரை ஏற்றி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து அங்கு நின்றிருந்தவர்களினால் அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதேவேளை கிளிநொச்சியின் பல்வேறு பகுதிகளில் கரும்புலி நாள் தொடர்பில் மக்களிற்கு விழிப்பூட்டி அழைப்பு விடுத்து பாதையில் சித்திரங்கள் வரையாப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் முதற் கரும்புலியாக கெப்டன் மில்லர் வீர மரணமடைந்தார்.

அவரின் நினவை அனுஷ்டிக்கும் வகையில் புலிகளினால் கரும்புலி நாள் நினைவு கூறப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

(யாழ். நிருபர் பிரதீபன்)

Most Viewed