Back to Top

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

August 6, 2018  

Bookmark and Share
க.பொ.த. உயர்தரப் பரீட்சை இன்று (06) காலை 8.30 மணிக்கு ஆரம்பமானது.

நாடு பூராகவும் உள்ள 2268 பரீட்சை நிலையங்களில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 பேர் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்.

யாழ். மாவட்டத்தில் இம்முறை இடம்பெறும் உயர் தரப் பரீட்சைக்காக 43,269 மாணவ, மாணவிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இதில் தனியார் பரீட்சார்த்திகளும் உள்ளடங்குகின்றனர் என யாழ். மாவட்ட வலயக் கல்விப் பணிமனை அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, மலையகத்திலும் மாணவர்கள் மிக ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்கு செல்லக் கூடியதை அவதானிக்க கூடியதாக இருந்ததாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும், பரீட்சை நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதாகவும் எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

(யாழ். நிருபர் ரமணன் மற்றும் மலையக நிருபர் கிரிஷாந்தன்)