
ஒரு மில்லியன் மரக்கன்று
October 4, 2018
தெரண ஊடக அமைப்பின் 13 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அலுவலக ஊழியர்களுக்காக மரக்கன்றுகளை வழங்கி வைக்கும் விஷேட நிகழ்வு இன்று (04) காலை 9.30 மணியளவில் தெரண தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக கமத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர கலந்து கொண்டார்.
இதன் போது அமைச்சரினால் தெரண ஊடக அமைப்பின் ஊழியர்களுக்காக மரக்கன்றுகள் வழங்கி வைக்கப்பட்டன.
கமத்தொழல் அமைச்சின் பூரண அனுசரனையுடன் இந்நிகழ்வு இடம்பெற்றதுடன் இதன்போது பலாக்கன்று, தேசிக்காய் கன்று மற்றும் கறுக்கா கன்று போன்றவை வழங்கி வைக்கப்பட்டன.