Back to Top

இராணுவ அணிவகுப்பு

இராணுவ அணிவகுப்பு

October 10, 2018  

Bookmark and Share
இலங்கை இராணுவத்தின் 69 ஆவது ஆண்டு நிறைவையொட்டி மன்னார் தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவின் ஏற்பாட்டில் இன்று (10) காலை மன்னாரில் இராணுவ அணிவகுப்பு இடம் பெற்றது.

மன்னார் சௌத்பார் பிரதான வீதியில் இன்று காலை 8.30 மணியளவில் குறித்த அணிவகுப்பு மரியாதை நிகழ்வு ஆரம்பமானது.

தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவு அதிகாரி பிரிக்கேடியர் செனரத் பண்டார தலைமையில் குறித்த அணிவகுப்பு நிகழ்வு இடம் பெற்றது.

சௌத்பார் பிரதான வீதியில் ஆரம்பமான குறித்த அணிவகுப்பு ஊர்வலம் மன்னார் பஸார் பகுதிக்குச் சென்று மன்னார் பிரதான பாலத்தினுடாக தள்ளாடி 54 ஆவது படைப்பிரிவை சென்றடைந்தது.

குறித்த நிகழ்வில் 70 அதிகாரிகளும், 800 இராணுவ வீரர்களும் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தனர்.

(மன்னார் நிருபர் லெம்பட்)