Back to Top

தீபாவளிக்கு மலையக மக்கள் தயார்...!

தீபாவளிக்கு மலையக மக்கள் தயார்...!

November 5, 2018  

Bookmark and Share
தீபாவளி பண்டிகை நாளை (06) நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு மலையகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தீபாவளி திருநாளை வரவேற்க மலையக தோட்ட மக்கள் தற்போது ஆயத்தமாகி வருகின்றனர். தோட்ட தொழிலாளர்களுக்கு தோட்ட நிர்வாகத்தினால் தீபாவளி முற்பணம் வழங்கப்பட்டுள்ளது.

அதற்கு ஏற்ப பொருட்கள், உடைகள் கொள்வனவு, வீட்டுக்கு வர்ணம் பூசுதல், வீட்டை துப்பரவு செய்தல், திண்பண்டங்கள் தயாரித்தல் போன்ற செயற்பாடுகளில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தீபாவளியை முன்னிட்டு ஹட்டனில் வர்த்தக நிலையங்களில் மக்கள் கூட்டம் சாதாரண அளவில் காணப்பட்டமையை காணக்கூடியதாக இருந்தது.

இதன்போது அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்தனர். இரவு பகலாக பொலிஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

(மலையக நிருபர் கிரிஷாந்தன்)