Back to Top

எமக்கும் பெருமை!

எமக்கும் பெருமை!

November 28, 2018  

Bookmark and Share
சபாநாயகர் கரு ஐயசூரியவை ஆதரித்தும் அவருக்கு வாழ்த்து தெரிவித்தும் யாழ். குடாநாட்டின் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

நாட்டில் காணப்படும் அரசியல் நெருக்கடி நிலைமையில் சபாநாயகரின் செயற்பாடுகள், 'எமக்கும் பெருமை', 'நாட்டிற்குப் பெருமை' எனது தலைப்பிடப்பட்டே இச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இந்த சுவரொட்டிகளில் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் அதிகாரங்கள் மற்றும் மக்களின் அபிலாசைகளுக்கமைய நாட்டின் ஜனநாயகத்தை நிலை நிறுத்த அச்சமின்றி வீரத்துடன் கடமையாற்றியுள்ள சபாநாயகருக்கு நாட்டு மக்களின் ஆசீர்வாதங்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

(யாழ். நிருபர் பிரதீபன்)