Back to Top

மகா சிவராத்திரி விரதம்

மகா சிவராத்திரி விரதம்

March 5, 2019  

Bookmark and Share
ஆனவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களை அடக்கி ஆளும் இந்துக்களின் சிறப்புமிக்க விரதங்களில் ஒன்றான மகா சிவராத்திரி விரதம் மிக சிறப்பாக இந்துக்களால் அனுஷ்ட்டிக்கப்பட்டன.

மகா சிவராத்தியினை முன்னிட்டு சிவ ஆலயங்களில் நேற்று (04) பகல் முதல் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

அந்தவகையில் மகா சிவராத்திரி விஷேட நிகழ்வுகள் வரலாற்று சிறப்பு மிக்க கீரிமலை நகுலேஸ்வரர், நகுலாம்பிகை சமேதரான ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.

கருவரையில் வீற்று இருக்கும் சிவன்பெருமான் மற்றும் லிங்கோற்பமூர்த்தி ஆகியவற்றுக்கு விஷேட அபிசேங்கள், ஆராதணைகள் என்பன இடம்பெற்றன.

இதில் பல பாகங்களில் இருந்து வருகை தந்த பொது மக்கள் பலரும் கலந்து கொண்டு நகுலேஸ்வரர், நகுலாம்பிகை ஆகிய அருட்கடாச்சத்தினை பெற்றுச்சென்றனர்.

இதேவேளை மன்னார், திருக்கேதிஸ்வர ஆலயத்திலும் மகா சிவராத்திரி விஷேட நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

இந்நிகழ்வில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து பல இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன் நுவரெலியா ஸ்ரீ லங்காதீஸ்வர ஆலய காயத்திரி பீடத்தில் மகா சிவராத்திரி விழா மிகவும் பக்தி பூர்வமாக நடைபெற்றன.

இப்பூஜையில் விநாயகர் வழிபாடு, பாலாபிசேகம், தேன் அபிசேகம், பஞ்சாமிர்த அபிசேகம், சங்காபிசேகம், திரவிய அபிவிசேகம் உட்பட பல்வேறு அலங்கார அபிசேகங்கள் இடம்பெற்றதுடன் இரவு முழுவதும் நான்கு சாமப்பூஜைகளும் சிறப்பாக நடைபெற்றன.

இவ்விஷேட பூஜை வழிபாடுகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடுகளில் ஈடுப்பட்டமை குறிப்பிடதக்கது.

(அத தெரண நிருபர்கள் கிரிஷாந்தன், லெம்பட், ரமணன்)