Back to Top

தெரண டிரீம் ஸ்டார் - இறுதிச் சுற்று

தெரண டிரீம் ஸ்டார் - இறுதிச் சுற்று

March 10, 2019  

Bookmark and Share
இம்முறை தெரண டிரீம் ஸ்டார் சீசன் 8 இன் வெற்றியாளராக தனுர மதுகீத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இலங்கையின் முதல்தர மாபெரும் ரியலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சியான தெரண டிரீம் ஸ்டார் சீசன் 8 இன் இறுதி போட்டி நேற்று (09) மாலை வெகு விமர்சையாக இடம்பெற்றது.

கொழும்பு சுகததாஸ உள்ளக விளையாட்டு அரங்கில் நேற்று மாலை 7.30 மணிக்கு ஆரம்பமான இந்நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது.

பல சுற்றுக்களை கடந்து இறுதி சுற்றுக்கு கிரிஷாதி ரணதுங்க, ரவீன் தாருக மற்றும் தனுர மதுகீத் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களுள் தெரண டிரீம் ஸ்டார் சீசன் 8 இன் வெற்றியாளராக தனுர மதுகீத் தெரிவு செய்யப்பட்டதுடன் இரண்டாம் இடத்தை ரவீன் தாருகவும், மூன்றாம் இடத்தை கிரிஷாதி ரணதுங்கவும் பெற்றுக் கொண்டனர்.

வெற்றியாளர்களுக்கு விருதுகள் மற்றும் பணப்பரிசல்கள் வழங்கப்பட்டன.