Back to Top

அன்பில் மலர்ந்த அமரகாவியம்...

அன்பில் மலர்ந்த அமரகாவியம்...

April 12, 2019  

Bookmark and Share
யாழ். மாவட்ட திருமுறைக் கலாமன்றத்தின் ஏற்பாட்டில் தவக்கால ஆற்றுகையின் அன்பில் மலர்ந்த அமரகாவியம் என்னும் கருப்பொருளில் திருப்பாடுகளின் ஆற்றுகை நிகழ்வுகள் நேற்று (11) மாலை திருமுறைக் கலாமன்ற திறந்த வெளியரங்கில் நடைபெற்றது.

கிறிஸ்தவ பண்பாட்டில் தவக்காலம் என அழைக்கப்படுகின்ற நோன்புக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுகின்ற பல்வேறு முயற்சிகளின் வழிவந்த சடங்காவும் நாடகமாகவும் நிகழ்த்தப்படுகின்ற திருப்பாடுகளின் காட்சி நீண்ட காலமாக பல நாடுகளின் இவ் ஆற்றுகைகள் மேற்கொள்ளப்பட்டு மாபெரும் மக்கள் மத்தியில் பெரும் வெற்றி பெற்றுள்ளது.

ஆற்றுகை திருப்பாடுகள் எதிர்வரும் 3 நாட்கள் இடம்பெறும். இவ் ஆற்றுகையினை கண்டு களிப்பதற்காக அருட்சகோதர்கள், சகோதரிகள், பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

(யாழ். நிருபர் ரமணன்)

Most Viewed