Back to Top

தந்தை செல்வாவின் நினைவு தினம்

தந்தை செல்வாவின் நினைவு தினம்

April 26, 2019  

Bookmark and Share
இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் 42 வது நினைவு தினம் இன்று (26) மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.

இலங்கை தமிழரசுக் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் உள்ள தந்தை செல்வா பூங்காவில் இன்று காலை நடைபெற்றது.

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச் செயலாளர் கி. துரைராஜசிங்கம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் தி. சரவணபவன், பிரதி முதல்வர் க. சத்தியசீலன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான பொன். செல்வராஜா, பா. அரியநேத்திரன், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார், இலங்கை தமிழரசுக் கட்சியின் வடகிழக்கு மாகாண இளைஞர் அணி தலைவர் சேயோன் உட்பட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதன்போது தந்தை செல்வாவின் சிலைக்கு மலர் மாலைகள் அணிவிக்கப்பட்டதை தொடர்ந்து மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.

இறுதியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் ஸ்தாபக தலைவர் தந்தை செல்வாவின் ஆத்மசாந்திக்காக 2 நிமிடங்கள் மௌன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

(மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்)