Back to Top

திருமஞ்சத் திருவிழா

திருமஞ்சத் திருவிழா

July 10, 2019  

Bookmark and Share
வரலாற்று சிறப்பு மிக்க யாழ் வண்ணை ஸ்ரீ வீரமாகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத்திருவிழா நேற்று ஆலயத்தில் மிகவிமர்சையாக இடம்பெற்றது

கருவரையில் அலங்கரிக்கும் ஸ்ரீ வீரமாகாளியம்மன் மற்றும் வசந்தமண்டவத்தில் அவதாரிக்கும் ஸ்ரீ விநாயகர், வள்ளி, தெய்வானை, முருகன் சமேதரான வீரமாகாளியம்மன் ஆகிய தெய்வங்களும் விசேட அபிவிசேகங்கள், ஆராதணைகள் என்பன இடம்பெற்றும் வசந்த மண்டவத்தில் இருந்து பீட வாகனத்தில் வீற்று உள்வீதியூடாக வலம் வந்து வெளிவீதியுடாக திருமஞ்சத்தில் வீற்று அருள்பாலித்தனர்.

சென்ற மாதம் 22.06 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய மஹோற்சவம் நேற்று 18 ஆவது திருவிழாகாக திருமஞ்சத்திருவிழாவும், எதிர்வரும் 15.07 அன்று தேர்த்திருவிழாவும், மறுநாள் தீர்த்த திருவிழாவுடன் இனிதே மாலை மஹோற்சவ கொடியிரக்கத்துடன் திருவிழாக்கள் அனைத்தும் நிறைவடையும்

இவ் மஹோற்சவ கிரிகைகளை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ அ.கமல்ராஜ் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

இவ் திருமஞ்சத்திருவிழாவினை கண்டுகொள்ளுவதற்காக பலபாகங்களில் இருந்து வருகைதந்த பக்த அடியார்கள் பலரும் கலந்துகொண்டு இஷ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

(யாழ். நிருபர் ரமணன்)