Back to Top

ஐஸ்வர்யங்களை அள்ளி அருளட்டும்....

ஐஸ்வர்யங்களை அள்ளி அருளட்டும்....

August 10, 2019  

Bookmark and Share
ஐஸ்வர்யங்களை அள்ளி அருளும் ஸ்ரீ வரலட்சுமி விதர உற்சவம் நேற்று (09) யாழ். மாவட்டத்தில் உள்ள விஷ்ணு மற்றும் லக்ஷ்மி நாராயண ஆலயங்களில் சிறப்பான பூஜைகளுடன் இடம்பெற்றன.

இதனை முன்னிட்டு வரலாற்று சிறப்பு மிக்க வண்ணை ஸ்ரீ வேங்கட வரதாராஜ பெருமாள் ஆலயத்திலும் ஸ்ரீ லக்ஷ்மி நாராயண பெருமானுக்கும் விசேட பூசைகள் ஆராதனைகள் இடம்பெற்றன.

பூஜை வழிபாடுகளின் பின்னர் புனித நூல்கள் பக்தர்களுக்கு அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெருந்திராளான பக்த அடியார்கள் கலந்து கொண்டார்.

(யாழ். நிருபர் ரமணன்)

Most Viewed