Back to Top

இரதோற்சவம்

இரதோற்சவம்

September 10, 2019  

Bookmark and Share
வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று மிக பக்திபூர்வமாக இடம்பெற்றது.

கருவரையில் வீற்றுயிருக்கும் துர்க்கையம்மனுக்கும் வசந்தமண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், முருகன், அம்மனுக்கு ஆராதனைகள் என்பன இடம்பெற்றும் வசந்தமண்டவத்தில் இருந்து துர்க்கையம்மன் அலங்காரிக்கப்பட்ட பீடத்தில் வீற்று உள்வீதியுடாக வலம் வந்து வெளிவீதியில் தேரேரி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

இவ் ஆலயத்தின் மஹோற்சவம் கடந்த 31.08. அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இம் மஹோற்சவம் இன்று தேர் உற்சவத்துடன் நாளை தீர்த் தஉற்சவத்துடன் மாலை கொடியிரக்கத்துடன் இனிதே மஹோற்சவம் நிறைவடையும்.

இங்கு பக்தர்கள் தமது நேர்த்திக்கடன்களை நிறைவேற்றிக்கொள்ளுவதற்காக அங்கப்பிரதட்சணை செய்தும், அட்டாங்க பிரதட்சணை செய்தும், தூக்குகாவடி எடுத்தல், கற்பூரச்சட்டி எடுத்தல் போன்றவற்றில் ஈடுப்பட்டு இஸ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

இவ் மஹோற்சவத்தின் ஆலய பிரதம குருக்கள் சிவஸ்ரீ சோமசுந்தரக் குருக்கள் தலைமையினான சிவாச்சாரிகள் கலந்துகொண்டு இவ் மஹோற்சவகிரிகைகளை நடாத்தி வைத்தனர்.

இங்கு நாட்டின் பல பாலகங்களில் இருந்தும் வருகை தந்த பக்தர்கள் கலந்துகொண்டு இஸ்டசித்திகளை பெற்றுச்சென்றனர்.

(யாழ். நிருபர் ரமணன்)