Back to Top

பூமித் தாய்க்கு என்னிடம் இருந்து ஒரு மரம்

பூமித் தாய்க்கு என்னிடம் இருந்து ஒரு மரம்

October 6, 2019  

Bookmark and Share
தெரண தொலைக்காட்சியின் 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு மனுசத் தெரண நேச்சர் பேர்ஸின் ஊடாக முன்னெடுக்கப்படும் "பூமித் தாய்க்கு என்னிடம் இருந்து ஒரு மரம்" வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டது.

அதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சபாநாயகர் கரு ஜயசூரிய, எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மக்கள் தேசிய சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க ஆகியவர்கள் பங்குபற்றியிருந்தமை சிறப்பம்சமாகும்.

ஒரு மில்லியன் மரக்கன்றுகளை நாட்டும் வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்த இலங்கையின் முதற்தர தொலைக்காட்சி அலைவரிசையான ரிவி தெரண தனது 14 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு இம்முறை "பூமித் தாய்க்கு என்னிடம் இருந்து ஒரு மரம்" என்ற கருப்பொருளில் உலக சாதனை ஒன்றை முன்னெடுக்க தயாராகவுள்ளது.

உலகில் எங்கிருந்தாலும் சுற்றுச்சூழலை நேசிக்கும் இலங்கையராக, மரம் ஒன்றை நாட்டி இலங்கை தாய் நாட்டின் பெயரை கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்வதற்கான பெருமைமிக்க பங்குதாரராக உங்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

நீங்கள் மரம் நாட்டும் புகைப்படத்தை வட்ஸ்அப் அல்லது வைபர் ஊடாக 0772 466 488, 0783 838 383, 0784 84 84 84 ஆகிய இலக்கங்களுக்கு அனுப்பி வைக்க முடியும்.

உலகின் மிகப்பெரிய சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் தொகுப்பில் உங்கள் புகைப்படத்தையும் சேர்க்க மனுசத் தெரண தயாராக இருக்கின்றது.

Most Viewed