Back to Top

ஜனாதிபதி வேட்பாளர்கள்

ஜனாதிபதி வேட்பாளர்கள்

October 7, 2019  

Bookmark and Share
இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக 35 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யும் நடவடிக்கை இன்று காலை 9 மணி முதல் 11 மணி வரையில் இடம்பெற்றது.

அதனடிப்படையில் 35 பேர் 2019 ஆம் ஆண்டிற்கான ஜனாதிபதி தேர்தலிற்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

41 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த நிலையில் அதில் 35 பேர் மாத்திரமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

சமல் ராஜபக்ஷ மற்றும் குமார வெல்கம உட்பட 6 பேர் கட்டுப்பணம் செலுத்தியிருந்த போதிலும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Viewed