
ஈழத்து சிதம்பரத்தின் பஞ்ச இரதோற்சவம்
January 9, 2020
பஞ்ச ஈஸ்வரங்களின் ஒன்றான வரலாற்று சிறப்பு மிக்க ஈழத்து சிதம்பரம் என அழைக்கப்படும் காரைநகர் சிவன் ஆலயத்தின் மார்கழி திருவாதிரை திருவெம்பாவை உற்சவத்தின் பஞ்ச இரதோற்சவம் இன்று ஆலயத்தின் மிகவிமர்சையாக நடைபெற்றது.
இவ் உற்சவமானது கடந்த 01.01.2020 அன்று மார்கழி திருவாதிரையின் திருவெம்பாவை உற்சவம் அன்று ஆரம்பமானது.
பெருந்திரளான பக்தர்கள் கலந்து கொண்டு இஷ்ட சித்திகளை பெற்றுச் சென்றனர்.
(யாழ். நிருபர் ரமணன்)