Back to Top

பொங்கல் வியாபாரம்

பொங்கல் வியாபாரம்

January 13, 2020  

Bookmark and Share
எதிர்வரும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்துக்கள் தற்போது பொருட்களை கொள்வனவு செய்வதில் ஆர்வம் காட்டி வருவதை காணக் கூடியதாக உள்ளது.

அந்தவகையில் வாழைச்சேனை, கிரான், ஓட்டமாவடி பிரதேச வியாபார நிலையங்களில் இந்து மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புத்தாடைகள், பொங்கல் பண்டிகைக்குரிய பொருட்களை மும்முரமாக கொள்வனவு செய்து வருகின்றனர்.

எதிர்வரும் புதன்கிழமை தைப்பொங்கல் பண்டிகையை நாடளாவிய ரீதியில் உள்ள இந்து மக்கள் சூரியனுக்கு நன்றி செலுத்தும் முகமாக பொங்கல் பொங்கி கொண்டாடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

(மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)