Back to Top

நெல் அறுவடை விழா

நெல் அறுவடை விழா

February 6, 2020  

Bookmark and Share
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பரப்பாங்கண்டல் கிராமத்தில் இன்று (06) காலை 11 மணி அளவில் நெல் அறுவடை விழா (வயல் விழா) இடம்பெற்றது.

மன்னார் விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம் பெற்ற குறித்த நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய பணிப்பாளர் சிவகுமார் கலந்து கொண்டார்.

இதன் போது 'சுகந்தல்' எனும் நெல் அறுவடை செய்யப்பட்டது. குறித்த நெல் அறுவடை விழாவில் விவசாய திணைக்கள அதிகாரிகள், பயிணாளர்கள், விவசாயிகள், பொது மக்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

(மன்னார் நிருபர் லெம்பட்)