Back to Top

தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு

தேசிய படைவீரர் ஞாபகார்த்த நிகழ்வு

May 19, 2020  

Bookmark and Share
முப்பது வருடகால போருக்கு முற்றுப்புள்ளி வைத்துஇ இலங்கையின் இறையாண்மையையும் ஆட்புல ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க உயிர் நீத்த மற்றும் காணாமற்போன படைவீரர்களை நினைவுகூர்ந்து கௌரவிப்பது தேசிய படைவிரர் ஞாபகார்த்த நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சி பாராளுமன்ற மைதானத்தில் உள்ள தேசிய படைவீரர் ஞாபகார்த்த நினைவுத் தூபிக்கு அருகில் நடைபெற்றது.

சர்வமதத் தலைவர்கள், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர்கள், பாதுகாப்பு செயலாளர், முப்படைத்தளபதிகள் அடங்கலாக பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்கிறார்கள்.

நிகழ்ச்சியின் தொடக்கத்தில் உயிர்நீத்த படைவீரர்களின் ஆத்மசாந்திக்காக மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. படைவீரர்கள் ஆற்றிய சேவைகளை மதத் தலைவர்கள் பாராட்டிப் பேசினார்கள்.