Back to Top

பெருந்திருவிழா

பெருந்திருவிழா

June 26, 2020  

Bookmark and Share
வரலாற்று சிறப்பு மிக்க அபிசேககந்தன் என அழைக்கப்படும் மாவிட்டபுரம் ஸ்ரீ கந்தசாமி ஆலயத்தின் காம்யோற்சவ மஹோற்சவத்தின் பெருந்திருவிழா இன்று சிறப்பாக இடம்பெற்றது.

கருவறையில் வீற்று இருக்கும் ஸ்ரீ கந்தசாமி, வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்கள் உட்பட 108 சங்காபிசேக கிரிகைகளும் விசேட அபிசேக ஆராதனைகள் என்ப இடம்பெற்றது.

இதனை தொடர்ந்து வசந்த மண்டபத்தில் அருள்பாலித்து இருக்கும் அபிசேக கந்தனுக்கு வள்ளி, தெய்வானைக்கும் தீப ஆராதனை அர்ச்சனைகள் இடம்பெற்றதை தொடர்ந்து எம்பெருமான் மயில் வானத்தில் வீற்று உள் வீதிவலம் வந்து அருள்பாலித்தார்.

இவ் காம்யோற்சவ பெருந்திருவிழா 25 நாள் காலை, மாலை விசேட பூஜைகள் என்பன இடம்பெற்று எதிர்வரும் 19 ஆம் திகதி அன்று காலை தேர்த்திருவிழாவும், மறுநாள் தீர்த்தம் காலை ஆடி அமாவாசை அன்று கீரிமலை தீர்த்தகேணியில் தீர்த்தம்மாடிய பின் இனிதே பெருந்திருவிழா நிறைவடையும்.

இவ் பெருந்திருவிழாவினை ஆலய பிரதம குரு சிவஸ்ரீ இரத்தினசபாவதி குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்திவைத்தனர்.

தற்போது நாட்டில் எற்பட்டுள்ள கொரோனா வைரஸ் காரணமாக பெரும் அளவான பக்தர்கள் இவ் பெருந்திருவிழாவில் கலந்துகொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

(யாழ் நிருபர் ரமணா)