Back to Top

நாடளாவிய ரீதியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

நாடளாவிய ரீதியில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை

August 1, 2020  

Bookmark and Share
இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் (01) புனித ஹஐ்ஜுப் பெருநாளினை கொண்டாடுகின்றனர்.

அந்த வகையில் நாட்டின் பல பிரதேசங்களில் இஸ்லாமிய மக்கள் புனித ஹஐ்ஜுப்பெருநாளினை வெகுவிமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.

யாழ் மாவட்டத்திலும் இஸ்லாமிய மக்கள் தமது பெருநாளினை சிறப்புமிக்க பள்ளிவாசலிகளில் இருந்து வழிபாடு செய்துள்ளனர்.

இதனை முன்னிட்டு யாழ் நகர் ஐந்து முற்சந்தியில் அமைந்துள்ள செவல முகதீன் பள்ளிவாசலில் புனித ஹஐ்ஜுப்பெருநாள் துவாதொழுகைகள் சிறப்பாக இடம்பெற்றன.

இவ் தொழுகையினை செவல முகதீன் பள்ளிவாசலின் வழிபாட்டு ஒருங்கிணைப்பாளர் ஆர்.எச்.ஐபீர் மௌலவி தலைமையில் நடைபெற்றது

இதன் போது ஹஐ்ஜுப்பெருநாளின் முக்கியத்துவம், அல்குரானின் சமய நற்சிந்தனைகள், பற்றியும் இங்கு எடுத்துகூறப்பட்டது.

இவற்றில் நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இம்முறை மாத்திரம் ஒவ்வொரு பள்ளிவாசல்களில் இவ் துவா தொழுகைகள் இடம்பெற்றுள்ளது. இவற்றில் சமூக இடைவெளிகளை பின்பற்றி பலர் இதில் கலந்துகொண்டார்

இதேவேளை, புனித ஹஜ் பெருநாள் விசேட தொழுகைகள் மன்னார் மாவட்டத்தில் உள்ள பள்ளிவாயல்களில் இன்று (01) காலை இடம் பெற்றது.

அதேபோல், திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேசத்தில் முஸ்லிம் பள்ளிவாயல்களில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகைகள் மிகவும் விமர்சையாக சுகாதார நடைமுறைகளுடன் சிறப்பாக இடம் பெற்றன.

இதேவேளை, அம்பாறை மாவட்டம் கல்முனை நற்பிட்டிமுனையில் ஏற்பாடு செய்யப்பட்ட ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையும், குத்பா பிரசங்கமும் இன்று (01) நற்பிட்டிமுனை தலைவர் அஷ்ரப் விளையாட்டு மைதானத்தில் சுகாதார நடைமுறைகளுக்கமைவாக சமூக இடைவெளிகள் பேணப்பட்டு இடம்பெற்றது.

இதேவேளை அம்பாறை மாவட்டத்தின் மருதமுனை பகுதியில் இஸ்லாமிய பிரசார மையம் ஏற்பாடு செய்த ஹஜ் பெருநாள் தொழுகை மருதமுனை அக்பர் ஜும் ஆப் பள்ளிவாசலில் இடம்பெற்றது

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா தொகுதி முஸ்லீம் பிரதேசங்களில் ஹஜ்ஜிப் பெருநாள் தொழுகைகள் பள்ளிவாயல்களில் இடம் பெற்றன.

இதன் அடிப்படையில் வாழைச்சேனை பிரதேசத்தில் பெருநாள் தொழுகையும் பெருநாள் கொத்பா பேருரையும் ஹைராத் பள்ளிவாயலில் கிழக்கு பல்கலைக்கழக சிரேஸ்ட விருவுரையாளர் அஷ்ஷெய்க் எம்.ரீ.எம்.றிஸ்வி நடாத்தி வைத்தார்.

இதன் போது நாட்டு மக்களுக்காகவும் அரசாங்கத்திற்கும் நல்லாசி வேண்டியும் கொரோனா நோயிலிருந்து உலக மக்களை பாதுகாக்குமாரும் வேண்டி துஆ பிராத்தனையும் இடம் பெற்றது.

(யாழ்ப்பாணம் நிருபர் ரமணன்) (அம்பாறை நிருபர் ஷிஹான்) (திருகோணமலை நிருபர் பாருக்) (மன்னார் நிருபர் லெம்பட்) (மட்டக்களப்பு நிருபர் குகதர்ஷன்)

Most Viewed