Back to Top

தைப்பொங்கல்

தைப்பொங்கல்

January 14, 2022  

Bookmark and Share
தைப்பொங்கல், தமிழ் மாதத்தின் தை முதலாம் திகதி உலக நாடுகள் அனைத்திலும் வாழுகின்ற தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் ஓர் விழாவாகும்.

உழைக்கும் மக்கள் இயற்கைக்கும், மற்ற உயிர்களுக்கும் நன்றி சொல்லும் ஒரு நாளாக இதனைக் கொண்டாடுகின்றனர்.

நல்ல விளைச்சல் கொடுத்தமைக்காக பூமி, சூரியன், உதவிய மாடு போன்றவற்றிற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் படைத்து இந்நாளில் வழிபடுவார்கள்.

ஆண்டு தோறும் இப்பண்டிகை தமிழ் மக்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருவது வழமையாகும்.

அந்தவகையில் நாட்டு மக்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சமய வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுத்து தை பொங்கல் பண்டிகையை இன்று (14) கொண்டாடினார்கள்.