
யோகா தின நிகழ்வுகள்...
June 21, 2022
யாழ்ப்பாண இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்தியாவின் 65 வது சுதந்திர தின ஆசாதிகா அம்ரித் மகோத்சவ் கொண்டாட்டங்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 8 வது சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இன்று (21) யாழ்ப்பாண கலாச்சார மத்திய நிலையத்தில் இடம் பெற்றது.
யாழ். இந்திய துணைத் தூதுவர் ராகேஷ் நடராஜ், வடக்கு மாகாண சபையின் அவைத் தலைவர் சி.வி.கே. சிவஞானம், யாழ். மாநகரசபை முதல்வர் வி. மணிவண்ணன், ஆணையாளர் ஆர். ஜெயசீலன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஆர். வரதீஸ்வரன், வடக்கு மாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்கள உதவிப் பணிப்பாளர் யாழ்ப்பாண வலய கல்விப் பணிப்பாளர் மற்றும் யாழ்ப்பாண வலயத்திற்குட்பட்ட பாடசாலை அதிபர்கள் பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டனர்.
மங்கள விளக்கேற்ற லோடு ஆரம்பமாகிய 8 வது சர்வதேச யோகா தின நிகழ்வின் ஆரம்பத்தில், யாழ். இந்திய துணைத் தூதுவரின் வரவேற்புரை இடம்பெற்றதோடு, யோகா பயிற்சியும் இடம்பெற்றது.
நிகழ்வின் இறுதியில் இன்றைய யோகா பயிற்சியில் கலந்து கொண்டோருக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.
(யாழ். நிருபர் பிரதீபன்)