
சூரிய மீன்
June 22, 2022
மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று இன்று (22) காலை சிக்கியது.
மத்திய கடல் மீன் ஆராய்ச்சி விஞ்ஞானிகள் சூரிய மீனை ஆய்வு செய்தனர்.
இந்த மீன் அதிகபட்சமாக 4 அரை அடி நீளமும், 2 ஆயிரத்து 300 கிலோ எடை வரையிலும் வளரும் தன்மை உடையது.
பாம்பன் விசைப்படகு மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீனை பொதுமக்கள் மற்றும் மீன் வியாபாரிகள் ஆர்வத்துடன் பார்த்தனர்.
(மன்னார் நிருபர் லெம்பட்)