Back to Top

கொடியேற்றம்

கொடியேற்றம்

August 2, 2022  

Bookmark and Share
வரலாற்று சிறப்பு மிக்க நல்லையம்பதி அலங்காரக் கந்தனின் மஹோற்சவ கொடியேற்றம் இன்று (02) பக்தி பூர்வமாக இடம்பெற்றது.

கருவரையில் வீற்று இருக்கும் அலங்கார வேலுக்கும், வசந்த மண்டவத்தில் அருள்பாலிக்கும் விநாயகர், நல்லூர் கந்தனுக்கும் வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விசேட அபிசேங்கள், ஆராதணைகள் என்ப இடம்பெற்று பின்னர் வசந்த மண்டவத்தில் இருந்து எழுந்தருளி கொடியேற்ற தம்பபீடத்திற்கு வந்தடைந்தது.

காலை 10 மணி அளவில் மேளதாள, வாத்தியங்கள் முழங்க அந்தன சிவாச்சாரியர்களின் வேதபாராயணம் ஒத ஆலய பிரதம குரு சிவஸ்ரீ அ.வைகுந்தன் தலைமையில் சிவாச்சாரியர்கள் பூக்கள் செறிந்து அலங்காரகந்தனின் மஹோற்சவ கொடியேற்றம் எற்றி வைக்கப்பட்டது.

இதனை தொடர்ந்து உள்வீதியுடாக எம்பெருமான் சமேதராக வலம் வந்தார்.

(யாழ். நிருபர் ரமணன்)

Most Viewed