கொழும்பு மாநகர சபை ஆவணங்கள் மயானத்தில் எரிப்பு: விசாரணைக்கு உத்தரவு (படங்கள்)

கொழும்பு மாநகர சபை ஆவணங்கள் மயானத்தில் எரிப்பு: விசாரணைக்கு உத்தரவு (படங்கள்)

August 18, 2013  12:03 pm

Bookmark and Share
கொழும்பு மாநரக சபையின் ஆறாயிரம் முக்கிய ஆவணங்கள் பொரளை மயானத்தில் வைத்து எரிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நேற்று (17) மாலை இவ்வாறு ஆவணங்கள் எரிக்கப்பட்டுள்ளன. இது குறித்து தகவல் அறிந்த கொழும்பு மாநகர சபை எதிர்கட்சி (ஐமசுமு), ஆளும் கட்சி (ஐதேக) உறுப்பினர்கள் பொரளைக்குச் சென்று ஆவணங்களை மீட்டு அதனை மாநாகர முதல்வர் முஸம்மிலிடம் ஒப்படைத்துள்ளனர்.

2008 - 2013 வரையான முக்கிய ஆவணங்கள் இவ்வாறு எரிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அத தெரண செய்திப் பிரிவு கொழும்பு மாநாகர மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலிடம் வினவியபோது,

இச்சம்பவம் குறித்து உள் விசாரணை நடாத்துமாறு மாநகர சபை அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளதாக தெரிவித்தார்.

நகர சபையின் நகர திணைக்கள செயலாளரை இணைக்கும் அதிகாரி செல்டன் பெரேரா, நகர சபை திணைக்கள செயலாளர் எஸ்.பி.சி.ஜானகி ஆகியோரே இந்த ஆவணங்களை எரிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆவணங்களை அழிக்க மாநகர ஆணையாளரிடம் அனுமதி பெறப்பட்டுள்ள போதும் நடைமுறைகளை மீறி தேவையான மற்றும் தேவையில்லாத ஆவணங்கள் என அனைத்தும் எரிக்கப்பட்டுள்ளதாக மாநகர மேயர் தெரிவிக்கின்றார்.

(அத தெரண - தமிழ்)


Share this article with a friend

Provide your friends' Email address (Multiple email addresses can be separated with a comma and
should not contain any in between spaces.)

Recepient(s)  Your Name 

அதிகம் பார்த்த காணொளிகள்

Copyright © 2012/13 Ada Derana. All rights reserved. Solution by Fortunaglobal.