Back to Top

தமிழக மீனவர்கள் 29 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

தமிழக மீனவர்கள் 29 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு

March 10, 2014  02:19 pm

Bookmark and Share
இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்கள் 29 பேருக்குமான விளக்கமறியல் 3வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ராமேஸ்வரம், மண்டபம், ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த மீனவர்கள் 29 பேரை கடந்த மாதம் 13ஆம் திகதி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர்.

யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களின் விளக்கமறியல் இன்று முடிவடைந்ததைத் தொடர்ந்து ஊர்க்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

அப்போது, அவர்களின் விளக்கமறியலை வரும் 24ஆம் திகதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, அவர்கள் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.