Back to Top

பல்கலை மாணவர் பலி: சந்தேகநபரான மாணவருக்கு மரண தண்டனை

பல்கலை மாணவர் பலி: சந்தேகநபரான மாணவருக்கு மரண தண்டனை

July 4, 2014  08:37 pm

Bookmark and Share
பேராதனை பல்கலைக்கழகத்தின் முதலாம் வருட பொறியியல் பீட மாணவன் செல்வவிநாயகம் வரப்பிரகாஷ் கடத்தி, தாக்கப்பட்ட (பின்னர் உயிரிழந்தார்) சம்பவம் தொடர்பிலான வழக்கில் சந்தேகநபருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

1997ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்த வழக்கு கண்டி மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இன்றைய தினம் தீர்ப்பு வழங்கப்பட்ட இந்த வழக்கில் சந்தேகநபரான பாலேந்திரன் பிரசாத் சதீஸ்கரனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

இதேவேளை இந்த இடம்பெற்ற வழக்கு விசாரணைகளுக்காக சந்தேகநபர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இந்தநிலையில் அவர் வௌிநாட்டில் தங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளதாகவும், அவரை இலங்கை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்​த சர்வதேச பொலிஸாரின் உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் இன்று நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான மாணவர் ஒருவருக்கு அபராதம் விதிக்கப்பட்டதோடு, உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு நஸ்டஈடு வழங்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

((அத தெரண தமிழ்)