Back to Top

பாவனாவுக்குக் காதலருடன் நிச்சயதார்த்தம்! (படங்கள்)

பாவனாவுக்குக் காதலருடன் நிச்சயதார்த்தம்! (படங்கள்)

March 10, 2017  03:56 pm

Bookmark and Share
நடிகை பாவனாவின் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி திருச்சூரில் நேற்று நடைபெற்றது.

கன்னட தயாரிப்பாளர் நவீனைக் கடந்த சில வருடங்களாகக் காதலித்து வருகிறார் நடிகை பாவனா.

நவம்பர் 2014-ல் இருவரும் திருமணம் செய்வதாக இருந்தது. ஆனால் தொடர்ந்து படங்களில் நடிக்க வேண்டியிருந்ததால் தற்போதுதான் இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 16 நண்பர்கள், உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சியில் நடிகை மஞ்சு வாரியரும் பங்கேற்றார்.

இந்த நிலையில் பாவனா ஒரு பேட்டியில் கூறியதாவது: என் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியை விளம்பரப்படுத்தக்கூடாது என்பதற்காக ரகசியமாக நடத்தினேன்.

அதனால் இந்த நிகழ்ச்சி என் வீட்டில் நடைபெற்றது. என் நெருங்கிய நண்பர்களைக் கூட நான் அழைக்கவில்லை.

நிச்சயதார்த்தம் நடக்கிறது என்கிற தகவலை மட்டுமே சொன்னேன். என் திருமணம் நடக்கும்போது எல்லோருக்கும் சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணுகிறேன்.

ஆனால் என் நிச்சயதார்த்த நிகழ்ச்சி வெளியே தெரிந்துவிட்டது.

நவீனைக் கடந்த 5 வருடங்களாகத் தெரியும். என் முதல் கன்னடப் படமான ரோமியோவின் தயாரிப்பாளர் அவர்.

எங்களுக்கு இந்த வருடம் திருமணம் நடக்கும் என்றார்.