Back to Top

கொட்டகலையில் தீயினால் வீட்டு உபகரணங்களுக்கு சேதம்

கொட்டகலையில் தீயினால் வீட்டு உபகரணங்களுக்கு சேதம்

March 16, 2017  05:50 pm

Bookmark and Share
கொட்டகலை மேபீல்ட் தோட்ட மாடி வீட்டுத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டு உபரணங்கள் முற்றாக எரிந்து நாசமாகியுள்ளன.

திம்புலை பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்ட மேற்படி குடியிருப்பு பகுதியில் 16.03.2017 காலை 10 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த வீட்டில் யாரும் இல்லாத வேலையில் வீட்டினுள்ளிருந்து புகை வெளியேறிய நிலையில், அயலவர்களினால் பார்வையிட்ட போது தீ பரவல் தெரியவந்ததுடன், உடனடியாக தோட்ட நிர்வாகமும் அயலர்களும் தீயை அணைத்து கட்டுபாட்டுக்குள்ள கொண்டுவந்துள்ளனர்.

இதனால் அயல் குடியிருப்புகளுக்கு பாதிப்புகள் ஏற்படவில்லை

குறித்த வீட்டில் உள்ளிருந்த தளபாடம் தொலைபேசி மற்றும் மின் உபகரணங்கள் என ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பொருட்கள் தீயில் நாசமாகியுள்ளதாக திம்புலை பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்.

மின்சார கோளாரே தீ விபத்துக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிப்பதுடன் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

(அத தெரண நிரூபர்)