Back to Top

ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் பெண்ணா நீங்கள்? (வீடியோ)

ஸ்ட்ரெஸ்ஸில் இருக்கும் பெண்ணா நீங்கள்? (வீடியோ)

March 17, 2017  11:50 am

Bookmark and Share
இல்லத்தரசிகள், பணிக்குச் செல்பவர்கள் என அனைத்து தரப்பு பெண்களையும் மன அழுத்தம் (ஸ்ட்ரெஸ்) விட்டு வைப்பதில்லை.

இந்த நிலையில் பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் பெண்கள் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்கலாம் என ´British Medical Journal Open´ நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதன்படி, ஒரு நாளைக்கு ஏழு முறை பழம், காய்கறிகள் சாப்பிடுபவர்களுக்கு ஸ்ட்ரெஸ் ஏற்படுவதற்கான வாய்ப்பு 23 சதவிகிதம் வரை குறைவு என ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வு 45 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய 60,000 பெண்களிடம் நடத்தப்பட்டது.

தினசரி ஐந்து முதல் ஏழு வரை பழம், காய்கறி சாப்பிடும் பெண்களுக்கு ஸ்ட்ரெஸ், மனச்சோர்வு போன்றவை பாதிப்பு குறைவு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்களை விட பெண்களுக்கு நல்ல பலன்களை கொடுப்பதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Most Viewed