Back to Top

பன்னங்கண்டி போராட்டத்திற்கு 14 நாள்... (படங்கள்)

பன்னங்கண்டி போராட்டத்திற்கு 14 நாள்... (படங்கள்)

March 17, 2017  01:38 pm

Bookmark and Share
கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பன்னங்கண்டி மக்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 14 வது நாளாக தொடர்கிறது.

காணி அனுமதி பத்திரம் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை கோரி பன்னங்கண்டி கிராம மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கெண்டு வருகின்ற நிலையில் அண்மையில் குறித்த காணி உரிமையாளரின் உறவினர் ஒருவர் இது தொடர்பில் நேரில் சென்று மக்களின் நிலைமைகளை பார்வையிட்டதுடன் தமது உறவினர்களுடன் பேசி சாதகமான முடிவைத்தருவதாக கூறிச்சென்றுள்ளார்.

இருப்பினும் தமக்கு சாதகமான முடிவு வரும்வரை போராட்டம் தொடரும் எனவும் தமக்கு சாதகமான பதிலை காணி உரிமையாளர் தருவார் என நம்பியவாறு இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

(அத தெரண நிருபர்)