Back to Top

தொடர்ச்சியான 2வது ஆண்டாக 'களனி சவால் கோப்பை – 2017' முன்னெடுப்பு

தொடர்ச்சியான 2வது ஆண்டாக 'களனி சவால் கோப்பை – 2017' முன்னெடுப்பு

March 17, 2017  06:37 pm

Bookmark and Share
களனி கேபிள்ஸ் பிஎல்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த களனி சவால் கோப்பை 2017 எனும் வருடாந்த கிரிக்கட் போட்டித்தொடர், கொழும்பு ப்ளும்ஃபீல்ட் கிரிக்கட் கழக மைதானத்தில் நடைபெற்றது.

அணிக்கு அறுவர் கொண்ட போட்டித்தொடர், தொடர்ச்சியான இரண்டாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் களனி கேபிள்ஸ் பிஎல்சி வாடிக்கையாளர்கள் பங்கேற்றிருந்தனர்.

இலங்கையின் கிரிக்கெட் வீரரும், ICC நடுவருமான ருசிர பள்ளியகுரு மற்றும் களனி கேபிள்ஸ் விற்பனை பிரிவின் பொது முகாமையாளர் அனில் முனசிங்க ஆகியோர் 30 அணிகளைக்கொண்ட இந்த போட்டித்தொடரை ஏற்பாடு செய்திருந்தனர்.

இதில் உள்நாட்டு நிர்மாணத் துறையைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களின் 30 அணிகள் பங்கேற்றிருந்தன.

´களனி சவால் கோப்பை – 2017´ போட்டியின் வெற்றியாளராக மெல்வயர் ரோலிங் கம்பனி கிரிக்கட் அணி சுவீகரித்திருந்ததுடன், இரண்டாம் மற்றும் மூன்றாமிடங்களை முறையே ரி.எச்.கே.இலெக்ரிகல் கம்பனி மற்றும் நவலோக கொன்ஸ்ட்ரக்ஷன் கம்பனி அணிகள் சுவீகரித்திருந்தன.

ரி.எச்.கே.இலெக்ரிகல் கம்பனியின் மனோஜ் தரங்க சிறந்த துடுப்பாட்ட வீரராக தெரிவாகியிருந்தார்.

மெல்வயர் ரோலிங்ஸ் கம்பனியின் ஏ.கற்பகராஜா சிறந்த பந்து வீச்சாளராக தெரிவாகியிருந்தார்.

மெல்வயர் ரோலிங்ஸ் கம்பனியின் ஆர்.லோகேஸ்வரன் இறுதிப் போட்டியின் சிறந்த வீரராக தெரிவாகியிருந்தார்.

ப்ளு ஓசியன் கம்பனியின் பி.சந்திரமோகன் போட்டித் தொடரின் நாயகனாக தெரிவாகியிருந்தார்.

´களனி சவால் கோப்பை – 2017´ பற்றி களனி கேபிள்ஸ் பிஎல்சி சந்தைப்படுத்தல் முகாமையாளர் (ஏற்றுமதி) தேவிந்த லொரென்சுஹேவா கருத்துத் தெரிவிக்கையில், ´இலங்கையில் காணப்படும் நிர்மாணத்துறையின் முன்னணி நிறுவனங்கள் களனி கேபிள்ஸ் பிஎல்சியுடன் வருடம் முழுவதும் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்கின்றன.

இக்கால கட்டத்தில் நாம் அவர்களுடன் அமைதியான வரவேற்கும் வகையில் ஒன்றிணைவை பேணுகிறோம்.

களனி கேபிள்ஸ் இந்த வருடாந்த போட்டித் தொடரை ஏற்பாடு செய்கிறது.

நிர்மாணத் துறையைச் சேர்ந்த தமது வியாபார பங்காளர்களுடன் தொடர்பை பேணுவது இதன் நோக்கமாகும்.

இது ஒரு சிறந்த வாய்ப்பாகும். நிறுவனத்தின் அங்கத்தவர்கள் மத்தியில் விளையாட்டு திறமைகளை மேம்படுத்தும் வகையிலும் அமைந்துள்ளது.

நிர்மாணத் துறையைச் சேர்ந்த சகல நிறுவனங்களும் களனி கேபிள்ஸ் பிஎல்சியுடன் கைகோர்த்து இந்த மாபெரும் நிகழ்வில் இணைந்துள்ளமை மகிழ்ச்சியளிக்கிறது´ என்றார்.

களனி கேபள்ஸ் என்பது 100 வீதம் இலங்கையை சேர்ந்த கம்பனியாகும்.

சுமார் 48 வருட காலமாக இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபள்களை உற்பத்தி செய்வதில் இந்நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

2008 இல் களனி கேபள்ஸ் பிஎல்சி ´சுப்பர் பிரான்ட்´ நிலையை எய்தியிருந்தது.

குறிப்பாக நிபுணத்துவம் வாய்ந்த சிறப்பாண்மைச் செயற்பாடுகளுக்காக கம்பனி இந்த நிலையை எய்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் 2012 இல், களனி கேபள்ஸ் பிஎல்சி நிறுவனத்துக்கு சிறந்த வர்த்தக நாமத்துக்கான வெண்கல விருது வழங்கப்பட்டிருந்தது.

2013 இல் இடம்பெற்ற SLIM வர்த்தக நாம சிறப்பு விருதுகள் வழங்கலில், இதே பிரிவில் தங்க விருதை தனதாக்கியிருந்தது.

SLITAD மக்கள் அபிவிருத்தி 2013 விருதுகள் வழங்கும் நிகழ்வில், தனது ஊழியர்களின் பயிற்சிகள் மற்றும் மற்றும் நலன்புரி செயற்பாடுகள் தொடர்பில் கவனம் செலுத்தியிருந்தமைக்காக தங்க விருதையும் தனதாக்கியிருந்தது.

களனி கேபள்ஸ் நிறுவனத்துக்கு தரச்சிறப்புக்கான ISO 9000:2008 சான்று, சிறந்த சூழல் முகாமைத்துவத்துக்கான ISO 14001:2004 தரச்சான்றும் வழங்கப்பட்டுள்ளன.

தய்கி அகிமொடோ 5ளு விருதுகளின் தங்க விருதும் களனி கேபள்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

2014ல் நிறுவனம் சூழல் பொறுப்புணர்வுக்கான விருதை தனதாக்கியிருந்தது.

2015 இல் களனி கேபள்ஸ் பிஎல்சி ஆசியாவின் சிறந்த தொழில் வழங்குநர் விருதை தனதாக்கியிருந்தது.

களனி கேபள்ஸ் இலத்திரனியல் மற்றும் தொடர்பாடல் கேபள்கள் உற்பத்தி பிரிவு, 2015 தேசிய பசுமை விருதுகள் வழங்கலில் நிலைபேறான அபிவிருத்திக்காக கௌரவிக்கப்பட்டிருந்தது.

2015 இல் நிறுவனம் SLIM வர்த்தக நாமச் சிறப்புகள் விருதுகள் வழங்கலின் போது B2B பிரிவில் சிறந்த நிறுவனசார் சமூக பொறுப்புணர்வு செயற்பாட்டுக்கான விருதை தனதாக்கியிருந்தது.

2016ம் ஆண்டில் தேசிய மனித வளங்கள் சிறப்புக்கான வெள்ளி விருதை தனதாக்கியிருந்ததுடன், ஜனாதிபதி சூழல் விருதுகள் வழங்கும் நிகழ்வில் சூழல் பாதுகாப்பான அறிக்கையிடலுக்கான தங்க விருதையும் தனதாக்கியிருந்தது.

தேசிய பச்சை அறிக்கையிடல் கட்டமைப்பை பின்பற்றுவதாக களனி கேபள்ஸ் பிஎல்சி உறுதிபூண்டுள்ளது.

சூழலுக்கு நட்புறவான பொறுப்பு வாய்ந்த நிறுவனம் எனும் வகையில், களனி கேபள்ஸ் பிஎல்சி, பயன்படுத்துவதற்கு உகந்தது என்பதை குறிக்கும் ´பொறுப்பு வாய்ந்த பராமரிப்பு´ எனும் இலச்சினையை கொண்டுள்ளது.

இது ஏற்றுமதிப் பிரிவில் நிறுவனத்தின் கீர்த்தி நாமத்துக்கு பெருமளவு பெறுமதியை சேர்த்துள்ளது.

பட விளக்கம்:

´களனி சவால் கோப்பை – 2017´ ன் வெற்றியாளர்கள், மெல்வயர் ரோலிங்ஸ் கம்பனி கிரிக்கட் அணி, களனி கேபிள்ஸ் பிஎல்சி முகாமைத்துவத்துடன் காணப்படுகிறது.

Most Viewed