Back to Top

பணிப்பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்த போலி டாக்டர்

பணிப்பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து ஆபாச படம் எடுத்த போலி டாக்டர்

March 19, 2017  10:21 am

Bookmark and Share
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இரும்புலிக்குறிச்சியில் புத்கத்தை பார்த்து மருத்தவம் பார்த்து வந்த போலி டாக்டர் இளம் பெண்ணை பலாத்காரம் செய்து அவரை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டியுள்ளார்.

பெண் கொடுத்த புகாரை தொடர்ந்து பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மருத்துவ புத்தகங்களை படித்து பார்த்து பொதுமக்களுக்கு வைத்தியம் பார்த்து வந்துள்ளார் ரகுபதி என்பவர், இவர் மருந்தகம் ஒன்றையும் நடத்தி வந்துள்ளார்.

இதில் வேலை பார்த்த இளம் பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததோடு மட்டுமல்லாமல் அதை கைத்தொலைபேசியில் படம் எடுத்து வைத்து அந்த பெண்ணை மிரட்டியுள்ளார்.

என்னை இரண்டாவதாக திருமணம் செய்து கொள் இல்லை எனில் உனக்கு தெரியாமல் நான் எடுத்த உனது ஆபாசபடத்தை வெளியிட்டு விடுவேன் என மிரட்டியுள்ளார்.

அந்த பெண்ணிற்கு வீட்டில் கல்யாணம் நிச்சயம் செய்துள்ளனர். இதை அறிந்த ரகுபதி அந்த மாப்பிள்ளை வீட்டாரிடம் ஆபாச படங்களை காட்டியுள்ளார்.

இதனால் கல்யாணம் நின்றுள்ளது. இதை தொடர்ந்த அந்த பெண், பொலிசில் புகார் அளித்ததை தொடர்ந்து ரகுபதியை கைது செய்துள்ளனர்.