Back to Top

Ad

டெஸ்ட்: அவுஸ்திரேலிய அணி தடுமாற்றம்!

டெஸ்ட்: அவுஸ்திரேலிய அணி தடுமாற்றம்!

March 20, 2017  12:21 pm

Bookmark and Share
இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி முக்கியமான விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

ராஞ்சியில் கடந்த வியாழக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலியா முதலில் துடுப்பெடுத்தாடியது.

137.3 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 451 ஓட்டங்கள் பெற்றது.

அந்த அணியில் அதிகபட்சமாக தலைவர் ஸ்டீவன் ஸ்மித் 178 ஓட்டங்கள் பெற்றது.

இந்திய தரப்பில், ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இந்திய அணி 9 விக்கெட் இழப்புக்கு 603 ஓட்டங்கள் பெற்றிருந்த நிலையில், டிக்ளேர் செய்வதாக அணித் தலைவர் கோலி அறிவித்தார்.

முதல் இன்னிங்ஸில் அவுஸ்திரேலியாவைக் காட்டிலும் இந்தியா 152 ஓட்டங்கள் முன்னிலை பெற்றது.

இந்திய அணியில் சேதேஷ்வர் புஜாரா அற்புதமாக ஆடி இரட்டைச் சதம் அடித்தார்.

அவருடன் தகுந்த பார்ட்னர்ஷிப் அமைத்த ரித்திமான் சாஹா சதம் கடந்தார். இதையடுத்து, தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய அவுஸ்திரேலியா, 4-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 7.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 23 ரன்கள் எடுத்தது.

வார்னர் 14, நாதன் லயன் 2 ஓட்டங்களில் ஆட்டமிழந்த நிலையில், ரென்ஷா 7 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தார்.

இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க 8 விக்கெட்டுகளைக் கொண்டு 129 ஓட்டங்கள் பெற வேண்டிய நிலைமையில் ஆட்டத்தைத் தொடர்ந்த அவுஸ்திரேலிய அணி, இந்திய அணியின் பந்துவீச்சைச் சந்திக்க முடியாமல் தடுமாறியது.

இஷாந்த் சர்மாவின் பந்துவீச்சில் ரென்ஷா 15 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிறகு ஜடேஜா ஸ்மித்தை 21 ஓட்டங்களில் வீழ்த்தினார்.

முக்கியமான இரு வீரர்களை இழந்து தடுமாறி வருகிறது அவுஸ்திரேலிய அணி.

33 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 73 ஓட்டங்களை அவுஸ்திரேலிய அணி பெற்றது

Most Viewed