Back to Top

மரண வீட்டில் மோதல்: கர்ப்பிணிப் பெண் உட்பட ஏழ்வர் காயம்

மரண வீட்டில் மோதல்: கர்ப்பிணிப் பெண் உட்பட ஏழ்வர் காயம்

March 20, 2017  12:34 pm

Bookmark and Share
மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியிலுள்ள வீடொன்றில் ஏற்பட்ட மோதலில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உட்பட ஏழ்வர் காயமடைந்துள்ளனர்.

அப் பகுதியில் உயிரிழந்த பெண் ஒருவரின் மரண வீட்டில், மரணித்தவரின் மகன்கள் மற்றும் பேரன்களே இவ்வாறு மோதிக் கொண்டுள்ளனர்.

குறித்த பெண்ணின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக, ஒரு தரப்பினர் கூறியுள்ளனர். இதன்போது ஏற்பட்ட மோதலில் கூரிய ஆயுதத்தால் தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, காயமடைந்தவர்களில் ஒருவர் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

மேலும், மற்றையவர்கள் சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.

(அத தெரண தமிழ்)