Back to Top

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

பெண்ணின் தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டு ஓடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு

March 20, 2017  01:09 pm

Bookmark and Share
ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்டுச் சென்ற இருவர் மீது பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இன்று காலை ஆராச்சிக்கட்டு பகுதியில் வைத்து இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

ஆராச்சிக்கட்டு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஆயுர்வேத வைத்தியர் ஒருவரின் கழுத்தில் இருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையிட்ட இருவர் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்ல முற்பட்டுள்ளனர்.

அச் சந்தர்ப்பத்தில் அப் பகுதியில் இருந்து மோட்டார் வாகன பொலிஸ் பிரிவைச் சேர்ந்த சார்ஜன் மற்றும் கான்ஸ்டபில் ஒருவரும் சந்தேகநபர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர்.

இதில் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகிய நிலையில், அவர்கள் அங்கிருந்து தப்பித்துள்ளனர்.

பின்னர் அந்த மோட்டார் சைக்கிள் பிறிதொரு யுவதி மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

பின்னர் தாம் பயணித்த மோட்டார் சைக்கிளை அவ்விடத்திலேயே விட்டு விட்டு சந்தேகநபர்கள் தப்பி ஓட முற்பட்டுள்ளனர்.

எனினும், அவர்களைத் தொடர்ந்து வந்த பொலிஸார் சந்தேகநபர்கள் இருவரையும் கைதுசெய்துள்ளனர்.

எதுஎவ்வாறு இருப்பினும், துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி ஒருவரும், விபத்தினால் மற்றொருவரும் காயமடைந்துள்ளனர்.

இதனையடுத்து அவர்களையும் விபத்துக்குள்ளான பெண்ணையும் பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இவர்களில் படுகாயமடைந்த நிலையில் குறித்த யுவதி மேலதிக சிகிச்சைகளுக்காக, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

(அத தெரண தமிழ்)