Back to Top

மைத்திரி, ரணில் வராததால், திஸ்ஸவின் வழக்கு ஒத்திவைப்பு

மைத்திரி, ரணில் வராததால், திஸ்ஸவின் வழக்கு ஒத்திவைப்பு

March 20, 2017  03:42 pm

Bookmark and Share
போலி ஆவணம் தயாரித்ததாக குற்றம்சாட்டப்பட்டு, ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனு எதிர்வரும் ஜூலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரே வழக்கின் முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்கள் எனவும், பணி சுமை காரணமாக அவர்களால் இன்று நீதிமன்றத்தில் ஆஜராக முடியாது என முன்கூட்டியே அறிவித்துள்ளதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் வழக்கு முற்றாக முதலாம் மற்றும் இரண்டாம் சாட்சியாளர்களை அடிப்படையாக கொண்டுள்ளதால் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை என்ற காரணத்தினால் வழக்கை விசாரிக்க வேறு ஒரு திகதியை வழங்குமாறு கோரப்பட்டது.

இதனடிப்படையில் வழக்கு விசாரணைகளை எதிர்வரும் ஜூலை 17 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் மைத்திரிபால சிறிசேன மற்றும் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இரகசிய உடன்படிக்கை ஒன்றில் கையெழுத்திட்டுள்ளதாக கூறி போலி ஆவணம் ஒன்றை பகிரங்கப்படுத்திய குற்றச்சாட்டில் திஸ்ஸ அத்தநாயக்க கைது செய்யப்பட்டு கடந்த ஒக்டோபர் மாதம் 19ம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் அவர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

(அத தெரண தமிழ்)

Most Viewed