Back to Top

பாதுகாப்பான மருந்துகளை வழங்கும் நோக்கில் DHL அங்குரார்ப்பணம் செய்துள்ள புதிய வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதார நிலையம்

பாதுகாப்பான மருந்துகளை வழங்கும் நோக்கில் DHL அங்குரார்ப்பணம் செய்துள்ள புதிய வாழ்க்கை அறிவியல் மற்றும் சுகாதார நிலையம்

March 20, 2017  03:57 pm

Bookmark and Share
ஆகாயம், கடல் மற்றும் வீதிமார்க்கமாக சரக்கியல் தீர்வுகளை வழங்கி வரும் முன்னணி சர்வதேச வழங்குநரான DHL Global Forwarding நிறுவனம், இலங்கையின் மருந்து உற்பத்திகள் மற்றும் இறக்குமதியாளர்களின் உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்பான சேவையை உறுதி செய்யும் வகையில் கொழும்பில் அதன் முதலாவது வாழ்க்கை அறிவியல் மையத்தை அங்குரார்ப்பணம் செய்துள்ளது.

28°C வரையான வெப்பநிலை கொண்ட குளிர்ச்சியான அறை உள்ளடங்களாக தன்னியக்க வெப்பநிலை கண்காணிப்பு கொண்ட இந்த புதிய வசதியின் மூலம் இலங்கையின் மருந்தக கம்பனிகளுக்கு மருந்துப்பொருள் களஞ்சியசாலை மற்றும் விநியோகத்திற்கான உயர்கட்டுப்பாட்டுடன் கூடிய சூழல் வழங்கப்படுகிறது.

´இந்த புதிய நிலையத்தின் மூலமாக, இலங்கையின் மருந்தக கம்பனிகளுக்கு களஞ்சியப்படுத்தல் மற்றும் விநியோக செயன்முறையின் ஒவ்வொரு கட்டத்தின் போதும் உற்பத்தி ஆபத்தினை சமாளிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்படுவதுடன், தங்களது உற்பத்திகளை சந்தையில் எவ்வாறு வினைத்திறனுடன் தயார்படுத்துவது குறித்த வசதிகளும் வழங்கப்படுகின்றன.

இதற்கமைய, இலங்கையில் வளர்ந்து வரும் தனியார் சுகாதார பராமரிப்புச் சந்தையில் தம்மை முன்னணி வழங்குநராக நிலைநிறுத்திக் கொள்ளவிரும்பும் உள்நாட்டு மற்றும் சர்வதேச மருந்து உற்பத்தியாளர்களின் தரத்தை உறுதிப்படுத்துவதோடு குறைந்த நேரத்தில் உயர்தரமான உற்பத்திகளை விநியோகம் செய்யமுடியும்´ என ஆசிய மற்றும் தெற்காசியாவின் DHL Global Forwarding நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தோமஸ் டீபர் தெரிவித்தார்.

இலங்கையில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய வசதியுடன், வாழ்க்கை 1 அறிவியல் மற்றும் சுகாதார பராமரிப்பு துறையில் மிகச்சிறந்த உட்கட்டுமானத்துடன், உள்நாட்டு மருந்து கேள்விகளுக்கான சேவைகளை வழங்கவுள்ளதுடன், உலக மேடையில் மருந்துப் பொருள் பாதுகாப்பு மற்றும் சந்தை நிரம்பல் ஆகியவற்றில் அவர்களை சந்தை முன்னோடியாக திகழ வழிவகுத்துள்ளோம்.

களஞ்சியப்படுத்தல் மற்றும் உள்நாட்டு விநியோகத்துடன், வாழ்க்கை அறிவியல் நிலையமானது லேபளிங், விலைகுறியிடல் மற்றும் மருந்துப் பொருட்களை பொதியாக்குதல் போன்ற பெறுமதி சேர்க்கப்பட்ட சேவைகளையும் வழங்கிவருகிறது.

´இலங்கையில் மருத்துவ மற்றும் மருந்து இறக்குமதிகள் 2015 இல்; 460 மில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரித்திருந்தாலும், சில வைத்தியசாலைகள் மற்றும் கிளினிக்குகளின் முறையற்ற வெப்பநிலை, சீரற்ற சரக்கு இருப்பு மற்றும் மருந்து விநியோக தாமதம் போன்றவற்றினால் தரகட்டுப்பாட்டு பிரச்சினைகளை எதிர்கொண்டுவருகிறது´ என DHL Global Forwarding ஸ்ரீலங்காவின் இலங்கைக்கான முகாமையாளர் நஜுப்-உர்-ரஹ்மான் தெரிவித்தார்.

மூப்படையும் மக்கள் தொகை மற்றும் நாட்பட்ட நோய்களின் அதிகரிப்பு ஆகிய பிரச்சினைகளை இலங்கையின் சுகாதார பராமரிப்புத் துறைமுகங்கொடுத்துவரும் இந்த நேரத்தில் பாதுகாப்பான, நம்பகத்தன்மையான மற்றும் வினைத்திறன் மிக்க விநியோக உட்கட்டுமானத்தை கொண்டிருக்க வேண்டிய கடப்பாட்டினை மருந்து உற்பத்தியாளர்கள் மற்றும் மருத்துவமனைகள் கொண்டுள்ளன´ என மேலும் அவர் தெரிவித்தார்.

ஒட்டுமொத்த செயல்முறையையும் ஒரு முகப்படுத்துவதே எமது புதிய நிலையத்தின் நோக்கமாகும்.

ஏனெனில் உலகின் சிறந்த மருத்துவ விநியோக சங்கிலியின் கீழ் சிறந்த விநியோக நடைமுறைகளை பின்பற்றுவதனால், உற்பத்தியாளர் முதற்கொண்டு நோயாளர்கள் வரையான அனைத்து தரப்பினரும் தாம் பயன்படுத்தும் மருந்து வகைகள் மீதுமுழு நம்பிக்கையை கொண்டிருக்க முடியும்´என தெரிவித்தார்.

Most Viewed