Back to Top

Ad

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் - 29 வது நாள்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் - 29 வது நாள்

March 20, 2017  04:30 pm

Bookmark and Share
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் 29 வது நாளாக தொடர்கிறது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் கவனயீர்ப்பு போராட்டம் இன்று திங்கட்கிழமை இருபத்தொன்பதாவது நாளாக தீர்வின்றி தொடர்கிறது.

கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் கடந்த 20-02-2017 அன்று காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட தொடர் கவனயீர்ப்பு தொடர்கிறது.

இரவு பகலாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

Most Viewed