Back to Top

Ad

சீன பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

சீன பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி மைத்திரி சந்திப்பு

March 20, 2017  04:34 pm

Bookmark and Share
நாட்டுக்கு வந்துள்ள சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இன்று காலை ஜனாதிபதி இல்லத்தில் வைத்து இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

இதன்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட உறவினை நினைவுபடுத்திய ஜனாதிபதி, இலங்கையின் சுயாதீனம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு சீனாவால் வழங்கப்பட்ட ஒத்துழைப்பு குறித்தும் பாராட்டு தெரிவித்துள்ளார்.

அத்துடன், நீண்ட காலமாக இலங்கை பாதுகாப்பு படையினருக்கு சீனாவில் வழங்கப்படும் பயிற்சி வாய்ப்புக்கள் குறித்து நன்றி தெரிவித்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த வாய்ப்புக்கள் தொடர்ந்தும் பெற்றுக் கொடுக்கப்பட வேண்டும் எனவும் நம்பிக்கை வௌியிட்டுள்ளார்.

(அத தெரண தமிழ்)

Most Viewed