Back to Top

கழிவுகளை அகற்றகோரி ஹட்டனில் ஆர்பாட்டம்

கழிவுகளை அகற்றகோரி ஹட்டனில் ஆர்பாட்டம்

March 20, 2017  04:42 pm

Bookmark and Share
கழிவுகளை அகற்றக்கோரி ஹட்டன் பண்டாரநாயக்கபுர பிரதேசவாசிகள் ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர்.

கடந்த சில தினங்களாக ஹட்டன் நகர சபையால் கழிவுகள் அகற்றாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே இன்று (20) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கழிவுகள் வீதியோரங்களிலும் குடியிருப்பு பகுதிகளிலும் கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதனால் சுவாசிக்க முடியாதுள்ளதாகவும் சூழல் மாசடைவதாகவும் தெரிவித்தனர்.

ஹட்டன் - டிக்கோயா நகர சபையினர் உடனடியாக கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தெரிவித்தனர்.

இது தொடர்பில் ஹட்டன் டிக்கோயா நகரசபையின் செயலாளர் எஸ். பிரியதர்சினியிடம் கேட்ட போது தேர்தல் காலம் வருவதனால் பொது மக்களை தூண்டி விட்டு சில அரசியல்வாதிகள் ஆர்பாட்டங்களை முன்னெடுப்பதாக அவர் குற்றம்சுமத்தினார்.

ஹட்டன் டிக்கோயா நகர சபைக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை கொட்டுவதற்கு இடமொன்று தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் விரைவில் கழிவுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்தார்.