Back to Top

மாணவனின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியை

மாணவனின் கையில் கற்பூரம் கொழுத்திய ஆசிரியை

March 20, 2017  05:00 pm

Bookmark and Share
ஹட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட பொகவந்தலாவ ரொப்கில் தமிழ் வித்தியாலயத்தில் தரம் 03 ல் கல்வி பயிலும் மாணவன் ஒருவரின் வலது உள்ளங்கையில் வகுப்பாசிரியர் கற்பூரத்தை கொழுத்திய சம்பவம் அந்த பிரதேசத்தில் தீவிரநிலையை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வெள்ளிகிழமை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த பாடசாலையின் ஆசிரியை இடம் மாற்றம் செய்யுமாறு கோரி ரொப்கில் தோட்டமக்கள் இன்று (20) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த வெள்ளிகிழமை வகுப்பறையில் மாணவி ஒருவரின் 20 ருபா பணம் காணாமல் போனமை குறித்து அந்த ஆசிரியை ஆறு மாணவர்களை அழைத்து பணத்தினை எடுத்தவர்கள் மீளவும் ஒப்படைக்குமாறு கூறி மாணவர்களை அச்சுறுத்தியுள்ளார்.

இதன்போது, கற்பூரத்தை கொழுத்திய தருணத்தில் பரமேஸ்வரன் பவித்திரன் என்ற மாணவனின் உள்ளங்கையில் எரிகாயம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் குறித்த ஆசிரியை அழைத்து விசாரணை நடத்துவதற்காக ஹட்டன் கல்வி வலயத்தில் இருந்து குழு ஒன்று ரோப்கில் தமிழ் வித்தியாலயத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஹட்டன் வலயகல்வி பணிமனையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் மற்றும் ஹட்டன் வலயகல்வி பணிமனை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

Most Viewed