Back to Top

14 வது கிளையை கிரிபத்கொடையில் திறந்துள்ள பர்கர்கிங்

14 வது கிளையை கிரிபத்கொடையில் திறந்துள்ள பர்கர்கிங்

March 20, 2017  05:40 pm

Bookmark and Share
கிரிபத்கொடையில் பர்கர்கிங் உணவகம் திறந்துவைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் முக்கியமானதோர்புறநகர் பகுதியில்; 14வது கிளையாக அது திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இந்த உணவகத்தின் உரிமையாளர்களான சொப்ட் லொஜிக் ரெஸ்டோரன்ஸ் நிறுவனம், சொப்ட் லொஜிக் ஹோல்டிங்ஸ் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனத்தின் முழுமையான கிளை நிறுவனமாகும்.

புதிய பர்கர்கிங் கிளை இலக்கம் 145 தளுகம களனி என்ற முகவரியில் அமைந்துள்ளது.

ஒரு சிறந்த உணவகத்தை எதிர்ப்பார்த்திருந்த கிரிபத்கொடை மற்றும் அதன் சூழவுள்ள பகுதிகளைச் சேர்ந்த மக்களின் ஆவல் இதன் மூலம் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அற்புதமான சூழல், சிநேக பூர்வமான ஊழியர்கள், போதிய வாகன தரிப்பிட வசதி, சுவையான உணவு வகைகள் என எல்லா தேவைகளும் இங்கு பூர்த்தியாகியுள்ளன.

புதிய கண்டி வீதி பழைய கண்டி வீதி ஆகிய இரு வழிகளாலும் இங்கு பிரவேசிக்கலாம்.

இந்தப் பிரதேசத்தில் வசிப்பவர்கள் மற்றும் இந்தப் பகுதியை கடந்து செல்பவர்கள் ஆகியோரின் நன்மை கருதி இது வாடிக்கையாளர்களுக்கு மிகவும் வசதியாக அமைந்துள்ளது.

கிழமை நாட்களில் காலை 7 மணிமுதல் இரவு 11 மணிவரையும் வார இறுதி நாட்களில் காலை ஏழு மணிமுதல் நள்ளிரவு வரையிலும் இந்த உணவகம் திறந்திருக்கும்.

‘Home of the Whopper’ என தங்களை அழைத்துக் கொள்ளும் துரித உணவு ஜாம்பவான்கள் பிரத்தியேகமான சுத்தம் செழுமை என்பனவற்றுக்கு பெயர் போனவர்களாவர்.

பர்கர் வகை உணவுகளை விரும்புகின்றவர்களுக்கு இதைவிட சுத்தமான ஆரோக்கியமான ஒரு உணவகம் இருக்கமுடியாது.

இங்கு வருகை தருபவர்கள் உலகத் தரம் வாய்ந்த வித்தியாசமானதோர் உணவுப் பட்டியலில் இருந்து தமது தெரிவுகளை மேற்கொள்ளலாம்.

நூறு வீதம் மாட்டிறைச்சி அல்லது கோழியில் இருந்து தயாரிக்கப்பட்ட ஏனைய சுவையூட்டிகள் மற்றும் உணவுச் சேர்க்கைகளுடன் கூடிய பெரிய அளவிலான பனிஸ் வகை உணவுகள் இங்கு பிரத்தியேகமானவை. காலை உணவின் போது கொடுக்கப்படும் பணத்துக்கு நிகரான சத்துணவு பெறுமானத்தையும் பர்கர்கிங் வழங்குகின்றது.

அந்தவகை உணவுகள் அன்றைய தினத்தின் விஷேட உணவுகளாகவும் அமைந்துள்ளன.

முட்டை பர்கர்களின் விலை 100 ரூபாவில் தொடங்குகின்றது.

கோழிமற்றும் சீஸ் கலந்த உணவுகளும் கூட 200 ரூபா விலையில் தொடங்குகின்றமை ஒரு விஷேட அம்சமாகும்.

இவைதவிர இன்னும் வகைவகையான உணவுகளும் பானங்களும் கூட காலை உணவு தெரிவுகளாக இங்கு உள்ளன.

பகல் உணவைப் பொருத்தமட்டில் யாராலும் வெல்ல முடியாத விலையாக 230 ரூபாவில் தொடங்கி றோயல் லன்ச் 280 வரைசெல்கின்றது.

உணவுக்கு பிந்தியமென் உணவாக ஐஸ்கிரீம் 50 ரூபாவில் தொடங்குகின்றது.

சொக்கலேட் மோஸ், சொக்கலேட் பிஸ்கட் புடின் என இன்னும் பல இந்தப் பட்டியலில் உள்ளன.

´கிரிபத்கொடை புறநகர்பகுதி மக்களை உள்ளடக்கிய மிகவும் சுறுசுறுப்பானதோர் இடமாகும். அந்தவகையில் இலங்கையில்; பர்கர்கிங்கின் விஸ்தரிப்பு திட்டத்தின் கீழ் புதிய இணைப்புக்கும் இது மிகவும் பொருத்தமானதோர் இடமாகும்´ என்று கம்பனி பேச்சாளர் ஒருவர் கூறினார்.

இங்குநிறுவப்பட்டுள்ள ´டிஜிட்டல் விளையாட்டுத் தளம்´ சகல வயதினை சேர்ந்த பிள்ளைகளுக்கும் மிகவும் பிடித்தமானதோர் இடமாக அமையவுள்ளது.

மினி கால்பந்தாட்டம் உட்பட புரொஜெக்டர் மற்றும் தொடுகை உணர்வு மூலமானபலவகையான திகிலூட்டும் விளையாட்டுக்களில் இங்கே ஈடுபடலாம்.

சிறுவர்களுக்காக கொள்வனவு செய்யும் ஒவ்வொரு சிறுவர் உணவுடனும் ஒருவிளையாட்டுப் பொருளும் இலவசமாக வழங்கப்படும்.

பர்கர்கிங் இலங்கையில் கொள்ளுப்பிட்டி, கல்கிஸ்ஸ, ராஜகிரிய, ஆர்கெட் சுதந்திர சதுக்கம், சென்ட்ரல் ஹொஸ்பிடல் புட்கோர்ட், கண்டி சிற்றிசென்டர், லிபர்டி பிளாஸா, நீர்கொழும்பு, கோட்டை (கொழும்பு-01) வத்தளை, பாணதுறை, நுகேகொடை, பண்டாரநாயக்க சர்வதேச வி மானநிலையம் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.

சொப்ட் லொஜிக் ஹோல்டிங்ஸ் தனியார் நிறுவனத்தின் கிளை நிறுவனமான சொப்ட்லொஜிக் ரெஸ்ட்டோரண்ட் தனியார் வரையறுக்கப்பட்ட நிறுவனஉரிமைத் துவத்தின் கீழ் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டது முதல் பர்கர்கிங் குறுகிய காலத்தில் மிகவும் பிரபலம் பெற்றுள்ளஒருஉணவகமாகும்.

சொப்ட் லொஜிக் இலங்கையில் மிகவும் சுறுசுறுப்பானதோர் முன்னணி வர்த்தக குழுமமாகும்.

நாட்டின் வளர்ச்சி கண்டுவரும் பொருளாதார பிரிவிலும், சில்லறை வர்த்தகம், சுகாதார சேவை, தகவல் தொழில்நுட்பம், வாகனங்கள், சுற்றுலாதுறை, நிதித்துறை என பல பிரிவுகளில் இதன் ஆதிக்கம் வியாபித்துள்ளது.

Most Viewed