Back to Top

கண்டெயினரை விடுவிக்குமாறு உயரதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக தகவல்

கண்டெயினரை விடுவிக்குமாறு உயரதிகாரி ஒருவர் அழுத்தம் கொடுத்ததாக தகவல்

March 20, 2017  06:23 pm

Bookmark and Share
இத்தாலியில் இருந்து கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் மற்றும் மதுபானங்கள் அடங்கிய கண்டெயினரை விசாரணைகள் இன்றி விடுவிக்குமாறு, சுங்க உயர் அதிகாரி ஒருவர், அவருக்கு கீழுள்ள அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளதாக, தகவல்கள் வௌியாகியுள்ளன.

பேலியகொடை என்.என்.ஆர் பிரிவில் தற்போது இருக்கும் 40 அடி நீளமான இந்தக் கண்டைனர் மேலதிக சுங்கப் பணிப்பாளரின் உறவினர் ஒருக்கு சொந்தமான நிறுவனத்தினால் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

எதுஎவ்வாறு இருப்பினும், குறித்த கண்டையினர் பற்றி எந்தத் தகவலும் இதுவரை கிடைக்கப் பெறவில்லை என, அத தெரண மேற்கொண்ட விசாரணைகளின் போது, சுங்க ஊடகப் பேச்சாளர் தர்மசேன கஹதவல தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் சர்ச்சைக்குரிய இந்தக் கண்டெயினரின் இலக்கம் SEGU 4515240 எனவும், அதில் இருப்பது சட்ட விரோதமாக கொண்டுவரப்பட்ட சிகரெட்டுக்கள் மற்றும் மதுபானங்களே எனவும், நம்பத்தகுந்த வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.

(அத தெரண தமிழ்)