Back to Top

கைவரிசை காட்டியவரை காட்டிக்கொடுத்த சீ.சீ.டீ.வி

கைவரிசை காட்டியவரை காட்டிக்கொடுத்த சீ.சீ.டீ.வி

March 21, 2017  07:32 am

Bookmark and Share


ஹட்டன் நகரிலுள்ள தொலைத்தொடர்பு நிலையமொன்றில் திருட்டுத்தனமாக தன்னியக்க மீள் நிரப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு மீள் நிரப்பிய ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தொலை தொடர்பு நிலையத்தின் நேற்று முன்தினம் (19) இரவு 8.55 பணியாளர்கள் வெளியில் சென்றிருந்த போது அந்த இடத்திற்கு வந்த இளைஞன் ஒருவன் தன்னியக்க மீள் நிரப்பு இயந்திரத்தில் தனது கைபேசிக்கு 500 ருபா மீள் நிரப்பிய காட்சி வர்த்தக நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சீ.சீ.டீ.வி கமராவில் பதிவாகியிருந்தது.

சம்பவம் தொடர்பில் தொலைத்தொடர்பு நிலைய உரிமையாளரினால் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையில் நேற்று (20) இரவு 8 மணியளவில் அதே தொலைத்தொடர்பு நிலையத்திற்கு வந்த குறித்த இளைஞன் தொடர்பில் சந்தேகம் கொண்ட உரிமையாளர் உடனடியாக பொலிஸாருக்கு அறிவித்ததை அடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

இதனையடுத்து அவரை தடுத்துவைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.