Back to Top

சித்ஸ்ரீராம் நேரடி இசை நிகழ்வின் உத்தியோகப்பூர்வ வங்கிப் பங்காளியாக கொமர்ஷல் வங்கி

சித்ஸ்ரீராம் நேரடி இசை நிகழ்வின் உத்தியோகப்பூர்வ வங்கிப் பங்காளியாக கொமர்ஷல் வங்கி

June 14, 2017  12:14 pm

Bookmark and Share
பிரபல இந்திய அமெரிக்க இசை தயாரிப்பாளரும், பாடலாசிரியரும் பாடகருமான சித்ஸ்ரீராமின் இலங்கையில் இடம்பெறவுள்ள நேரடி நிகழ்வுக்கு உத்தியோகப்பூர்வ வங்கிப் பங்காளர் என்ற ரீதியில் கொமர்ஷல் வங்கி ஆதரவு அளிக்கவுள்ளது.

2012ம் ஆண்டு வெளியான கடல் திரைப்படத்தில் பிரபல இசைஅமைப்பாளர்யு.சு.ரஹ்மான் இசையில் ´அடியே´என ஆரம்பிக்கும் பாடலை பாடி புகழ்பூத்த சித் ஸ்ரீராம் பேர்க்லி இசைக் கல்லூரியில் இசைத் துறைபட்டம் பெற்றவர். தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் பாடல் ஆசிரியராகவும் பாடகராகவும் இவர் வலம் வருகின்றார். இசைத் துறையில் தற்போது காணப்படும் மனோ ஆர்வத்தை இந்தியாவின் பாரம்பரிய சங்கீதத்தோடு இணைத்து தனக்கென்று ஒரு தனிபாணியை வகுத்து இவர் இசை உலகில் வலம் வருகின்றார்.

சித்ஸ்ரீராம் நேரடி நிகழ்வு இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபத்தில் (SLECC) 2017 ஜுன் 25 ஞாயிற்றுக்கிழமை அன்று இடம்பெறவுள்ளது. டிரீம் ஹவுஸ் பிரடக்ஷன்ஸ் நிறுவனம் இதனை ஏற்பாடு செய்துள்ளது. www.fyi.lk என்ற இணையத்தளம் வழியாக டிக்கட்டுக்களை கொள்வனவு செய்யலாம்.

பல்வேறு கலாசாரங்களைக் கொண்ட பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கு கிராக்கி அதிகரித்து வருகின்ற நிலையில் சித் ஸ்ரீராம் இலங்கையில் ஒரு நிகழ்ச்சியை நடத்த மிகவும் பொருத்தமான ஒரு கலைஞராவார் என்று கொமர்ஷல் வங்கி பேச்சாளர் ஒருவர் கூறினார். எமது நாட்டில் சமூகத்தில் எல்லா பிரிவினர் மத்தியிலும், எல்லா வயதுப் பிரிவினர் மத்தியிலும் தமிழ் இசையை ரசிக்கும் ஒரு பிரதான பிரிவினர் உள்ளனர். எனவே இந்த நிகழ்வு பாரிய வெற்றியை அளிக்கும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக அந்த பேச்சாளர் நம்பிக்கை தெரிவித்தார்.

Most Viewed