Back to Top

உட்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்கும் MG குரூப் ஒஃவ் கம்பனிஸ்

உட்கட்டமைப்பு இடைவெளிகளை நிவர்த்தி செய்வதில் புத்தாக்கமான தீர்வுகளை வழங்கும் MG குரூப் ஒஃவ் கம்பனிஸ்

June 15, 2017  04:54 pm

Bookmark and Share
மாறிவரும் சர்வதேச சந்தை சூழலுடன் இலங்கைக்கு அனுகூலங்கள் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலை காணப்படுவதுடன், பொருளாதார மற்றும் சமூக உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பது எமது வாய்ப்புகளை பெற்றுக் கொள்வதற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்களாக அமைந்துள்ளன.

பொருளாதார சாதகச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பது, அதிகரித்துச் செல்லும் நாட்டின் உட்கட்டமைப்புக்கான தேவைகளை நிவர்த்தி செய்து கொள்ள பங்களிப்பு வழங்குவது ஆகியவற்றில் கவனம் செலுத்தும் குரூப் ஒஃவ் கம்பனீஸ் (MGG) நிறுவனம் புதிய செயற்திட்டமொன்றை முன்னெடுக்க முன்வந்துள்ளது.

1998 ல் ஸ்தாபிக்கப்பட்ட கொன்சல்டன்ட்ஸ் பிரைவட் லிமிட்டெட் (MGC), அக்கால கட்டத்தில் உட்கட்டமைப்புத் துறையில் ஆதிக்கம் செலுத்திய சர்வதேச ஆலோசனை நிறுவனங்கள் மத்தியில், தனது அனுபவம் மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டு சந்தையில் புரட்சியை ஏற்படுத்தி, பல செயற்திட்டங்களுக்கு பிரதான ஆலோசனைகளை வழங்கிய முதலாவது உள்நாட்டு நிறுவனமாக திகழ்ந்திருந்தது.

2011ல் என்ஜினியரிங் கொன்சல்டன்ட்ஸ் பிரைவட் லிமிட்டெட் (ECL) எனும் முன்னணி பொறியியல் ஆலோசனை நிறுவனத்தை கையகப்படுத்தியிருந்ததைத் தொடர்ந்து, MGC தனது சேவைகளை மேலும் வலுப்படுத்தியிருந்தது.

துறையில் மிகவும் மதிப்பைப் பெற்ற பொறியியல் சேவைகளை வழங்கும் நிறுவனமாக அறியப்பட்டிருந்தது.

இலங்கையில் ஒப்பிடப்பட முடியாத வகையிலான பரந்தளவிலான ஆலோசனைகளை அவர்கள் வழங்கியிருந்தனர்.

உட்கட்டமைப்புத் துறையுடன் தொடர்புடைய ஒன்றுடன் ஒன்று துணையாக செயலாற்றும் நிறுவனங்களும் இந்த குழுமத்தில் உள்வாங்கப்பட்டிருந்தன.

அவற்றில், ECL எனர்ஜி பிரைவட் லிமிட்டெட் மற்றும் என்டர்பிரைஸ் டெக்னொலஜி பிரைவட் லிமிட்டெட் (ETPL) போன்றன அடங்குகின்றன.

ECL எனர்ஜி நிறுவனத்தின் மூலமாக, புதுப்பிக்கத்தக்க வலு துறையில் பிரபல்யம் பெற்ற நிறுவனமாக திகழ்வதுடன், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செயற்திட்டங்களுக்கு நீர் மின் தீர்வுகளை வெற்றிகரமாக வழங்கியிருந்தது.

ETPL நிறுவனத்தின் மூலமாக முன்னணி வலையமைப்பு கட்டமைப்புகள் ஒன்றிணைப்பு சேவைகள் வழங்குநராக, SMART ICT உட்கட்டமைப்பு தீர்வுகளும் வழங்கப்பட்டிருந்தன. நிம்பஸ் வென்ச்சர் பிரைவட் லிமிட்டெடையும் ஒன்றிணைத்திருந்ததன் மூலமாக தனது செயற்பாடுகளை மேலும் விஸ்தரித்திருந்தது.

இதனூடாக தனது வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட் தகவல் தொழில்நுட்ப கட்டமைப்புகளையும், நவீன தொழில்நுட்ப வசதிகளையும் வழங்கும் குழுமத்தின் ஆற்றலை விரிவுபடுத்தியிருந்தது.

இந்த மூலோபாய கையகப்படுத்தல்கள் மூலமாகவும் தொடர்ச்சியாக தனது செயற்பாடுகளை விரிவுபடுத்தியிருந்தது.

இதனுடாகவும் MGG என்பது சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட வர்த்தக நாமமாக வளர்ந்துள்ளது.

இலங்கையின் முன்னணி உட்கட்டமைப்பு அபிவிருத்தி சேவைகளை வழங்கும் குழுமமாக திகழ்வதுடன், ஒரே கூரையின் கீழ் உட்கட்டமைப்புடன் தொடர்புடைய சகல விதமான தீர்வுகளையும் வழங்கி வருகிறது.

ஒன்றிணைக்கப்பட்ட, பல்தரப்பட்ட சேவைகளை வழங்கும் நிறுவனம் எனும் வகையில், MGG இன் செயற்பாடுகள் போக்குவரத்து, நிர்மாணிக்கப்பட்ட சூழல்கள், கல்வி, சுகாதாரம், நகர அபிவிருத்தி, நீர், நீர்ப்பாசனம், கழிகானியல், சூழல் மற்றும் காணி, தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பம், நிறுவன தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க வலு மற்றும் சொத்துக்கள் அபிவிருத்தி போன்ற துறைகளில் பன்முகப்படுத்தப்பட்ட ஈடுபாட்டைக் கொண்டுள்ளது.

எட்டு நாடுகளில் தனது பிரசன்னத்தைக் கொண்ட நிறுவனம் எனும் வகையிலும், எட்டு நாடுகளில் பிரசன்னத்தைக் கொண்டுள்ள நிறுவனம் எனும் வகையிலும், உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் தொழில்நுட்பச் சிறப்பு மற்றும் சிறந்த வாடிக்கையாளர் தன்னிறைவு போன்றவற்றுக்காக உறுதியான கீர்த்தி நாமத்தை நிறுவனம் கொண்டுள்ளது.

இதுவரையில் MGG இனால் 1235 திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அவற்றின் பெறுமதி 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அமைந்துள்ளன.

தொடர்ச்சியாக உறுதியான வளர்ச்சியை எதிர்பார்க்கும் குழுமம் எனும் வகையில், சர்வதேச விஸ்தரிப்பு மூலோபாயத் திட்டத்தை நிறைவேற்றுவதன் ஊடாக சவால்கள் மற்றும் வாய்ப்புகளை எதிர்பார்ப்பதுடன், ஒன்றிணைவுகள் மற்றும் கையகப்படுத்தல்கள் குறித்தும் கவனம் செலுத்தி வருகிறது.

போக்குவரத்துத் துறையில் குழுமம் பரந்தளவு அனுபவத்தைக் கொண்டுள்ளது,

குறிப்பாக அதிவேக நெடுஞ்சாலைகள், தேசிய மற்றும் கிராமிய வீதிகள் போன்றவற்றுக்கு ஆலோசனை சேவைகளை வழங்கி வருகிறது.

சில குறிப்படையாள உட்கட்டமைப்பு செயற்திட்டங்களை வெற்றிகரமாக வடிவமைத்து நிறைவேற்றவும், ஏற்கனவே காணப்பட்ட திட்டங்களை வெற்றிகரமாக மீளமைக்கவும், சிறந்த வினைத்திறன் மற்றும் இலாபகரத் தன்மையை பெற்றுக்கொடுக்கவும் நிறுவனம் நடவடிக்கைகளை முன்னெடுத்திருந்தது.

இந்த திட்டங்களில், கொழும்பு தென் துறைமுக கொள்கலன் இறங்குதுறை, எபிலிப்ஸி வைத்தியசாலை மற்றும் சுகாதார நிலையங்கள், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 4ம் கட்ட கட்டிடம், கண்டி மாநகர நீர் விநியோகத் திட்டம் மற்றும் மொரட்டுவ, இரத்மலானை, ஜா-எல கழிவு நீர் அகற்றல் செயற்திட்டம் போன்றன அடங்குகின்றன.

நாட்டின் முதலாவது சூழலுக்கு பாதுகாப்பான ஹோமாகம பகுதியில் அமைந்துள்ள NSBM SBM பல்கலைக்கழகம், மதிநுட்பமான சிந்தனையிலமைந்த பிரதான கருத்திட்டத்துக்கமைய நிர்மாணிக்கப்பட்டிருந்தது.

இதில் பிரத்தியேகமான பயிலும் பகுதிகள் அடங்கியுள்ளதுடன், சர்வதேச கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதன் அர்ப்பணிப்பு மற்றும் அனுபவம் ஆகியவற்றுக்காக புகழ்பெற்றுள்ள MGG, உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி திரட்டுவதற்காக உள்நாட்டு மற்றும் சர்வதேச நிதிவழங்கும் அமைப்புகளுடன் கைகோர்த்து செயலாற்றிய முதலாவது ஆலோசனை நிறுவனமாக திகழ்கிறது.

இலங்கையின் வெளிச்சுற்று நெடுஞ்சாலை - III, மத்திய அதிவேக நெடுஞ்சாலை – II மற்றும் மில்கோ பாற்பண்ணை தொழிற்சாலை அபிவிருத்தி போன்றன சிறந்த உதாரணங்களாகும்.

வளர்ச்சிக்காக முக்கியத்துவத்தை வழங்கும் MGG இனால் ஊழியர்களுக்கு பயில்வதற்கான வழிகள் ஏற்படுத்திக் கொடுப்பதுடன், அனுபவங்கள் மற்றும் முன்னேற்றங்களை பெறுவதற்கான வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன.

குழுமத்தினால் முன்னெடுக்கப்படும் வெளிநாட்டு செயற்திட்டங்களின் மூலமாக உள்நாட்டு திறமைசாலிகளுக்கு சர்வதேச வியாபாரங்களின் அனுபவங்களை பெற்றுக்கொள்வதற்கு சிறந்த வாய்ப்புகள் கிடைத்துள்ளன.

எல்லைகளுக்கு அப்பால் வளர்ச்சியடையும் உண்மையான இலங்கையின் நிறுவனமாக MGG திகழ்கிறது.